- முகப்பு
- மாவட்டச் செய்தி
- 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஏ.ஐ.டி.யு.சி., அரசு போக்குவரத்து கழக தொழிலாளர் சங்கத்தினர் கையெழுத்து இயக்கம்
16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஏ.ஐ.டி.யு.சி., அரசு போக்குவரத்து கழக தொழிலாளர் சங்கத்தினர் கையெழுத்து இயக்கம்
செ.சீனிவாசன்
UPDATED: Jun 24, 2024, 3:12:45 AM
தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் வரவுக்கும், செலவுக்குமான வித்தியாசத் தொகையை, பட்ஜெட்டில் அரசு ஒதுக்க வேண்டும். 15-வது புதிய ஊதிய ஒப்பந்தப் பேச்சைத் துவக்க வேண்டும். காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும்.
ஓய்வூதியருக்கு அகவிலைப்படி, பஞ்சப்பாடி உயர்வு வழங்க வேண்டும் உள்ளிட்ட 16 அம்ச கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வலியுறுத்தி ஏ.ஐ.டி.யு.சி., அரசு போக்குவரத்து கழக தொழிலாளர் சங்கம் சார்பில், மாநிலம் முழுதும் கையெழுத்து இயக்கம் நடைபெற்று வருகிறது.
அதன்படி நாகை புதிய பஸ் நிலையத்தில் ஏ.ஐ.டி.யு.சி போக்குவரத்து கழக தொழிற்சங்கம் சார்பில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு ஏ.ஐ.டி.யு.சி நாகை மண்டல பொதுச்செயலாளர் கோபிநாதன் தலைமை தாங்கினார். மண்டல பொருளாளர் பாஸ்கரன் மண்டல துணை செயலாளர் சுரேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கிளைச் செயலாளர் அன்புசாமி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில கட்டுப்பாட்டு குழு உறுப்பினர் பாண்டியன் உள்பட ஏ.ஐ.டி.யு.சி தொழிற்சங்கத்தினர் பலர் கலந்து கொண்டு, நாகை பஸ் நிலையத்துக்கு வரும் அரசு பஸ் கண்டக்டர்கள், டிரைவர்களிடம் கோரிக்கையை வலியுறுத்தி கையெழுத்து வாங்கினர்.
நாகை மண்டலத்துக்குட்பட்ட 1000-க்கு மேற்பட்டட கண்டக்டர்கள், டிரைவர்களிடம் கையெழுத்துகளை பெற்றனர்.