- முகப்பு
- மாவட்டச் செய்தி
- தமிழக அரசு சொத்து வரி உயா்த்தியதைக் கண்டித்து, அதிமுக மனித சங்கிலி போராட்டம்.
தமிழக அரசு சொத்து வரி உயா்த்தியதைக் கண்டித்து, அதிமுக மனித சங்கிலி போராட்டம்.
ரமேஷ்
UPDATED: Oct 8, 2024, 9:27:56 AM
கும்பகோணம்
திருவிடைமருதூர் தாலுகா திருப்பனந்தாள் கடை வீதியில் தமிழக மக்கள் கடந்த 40 மாதங்களாக பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனா். இதற்கு காரணமான திமுக அரசை கண்டித்தும், உயா்த்தப்பட்ட சொத்து வரியை மக்கள் நலன் கருதி உடனடியாக திரும்ப பெற வலியுறுத்தியும் அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி .பழனிசாமி, உத்தரவின் பேரில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக சார்பில் மாவட்ட செயலாளர் பாரதி மோகன், தலைமையில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.
இந்த போராட்டத்தில் மாவட்ட செயலாளர் பாரதிமோகன் தெரிவித்த போது ஸ்டாலினின் திமுக ஆட்சியில், மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்காமல் இதுவரை இல்லாத வகையில் ஆண்டுதோறும் 6 சதவீத சொத்து வரி உயர்வு என்ற பேரிடி மக்கள் தலையில் சுமத்தப்பட்டுள்ளது.
அதிமுக
இதன் காரணமாக அடித்தள மற்றும் நடுத்தர மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்படும். ஸ்டாலினின் திமுக ஆட்சியின் கொடுமை பொறுக்க முடியாமல் மக்கள் வடிக்கும் கண்ணீர் இந்த ஆட்சியை அழிக்கும் ஆயுதமாகும் நாள் வெகு தூரத்தில் இல்லை என்றும் 40 மாத காலமாக, மக்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருவதற்குக் காரணமான ஸ்டாலினின் திமுக அரசைக் கண்டித்தும்;
மக்கள் நலன் கருதி, உயர்த்தப்பட்ட சொத்து வரியை உடனடியாக திரும்பப் பெற வலியுறுத்தி இந்த மனித சங்கிலி போராட்டம் நடைபெறுகிறது என்று தெரிவித்தார்.
மனித சங்கிலி போராட்டம்
இந்த போராட்டத்தில் மாநில கொள்கை பரப்பு துணைச் செயலாளர் பி எஸ் சேகர், அம்மா பேரவை மாநில இணைச்செயலாளர் ஏவிகே அசோக் குமார், ஒன்றிய செயலாளர் கருணாநிதி, திருப்பனந்தாள் பேரூர் செயலாளர் மூர்த்தி, ஒன்றிய அவைத் தலைவர் ராதாகிருஷ்ணன், மீனவர் அணி மாவட்ட செயலாளர் ராஜேந்திரன், பொறுப்பாளர் பொன் த மனோகரன், மற்றும் நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.