- முகப்பு
- மாவட்டச் செய்தி
- வாக்குசாவடியில் அதிமுக மாவட்ட செயலாளர் பவுன்ராஜ் திமுக வாக்குசாவடி முகவரை சட்டையை பிடித்து தாக்க முயற்சி
வாக்குசாவடியில் அதிமுக மாவட்ட செயலாளர் பவுன்ராஜ் திமுக வாக்குசாவடி முகவரை சட்டையை பிடித்து தாக்க முயற்சி
செந்தில் முருகன்
UPDATED: Apr 19, 2024, 9:21:27 AM
தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் இன்று காலை 7:00 மணி முதல் தொடங்கி வாக்குப்பதிவு விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது.
மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட பூம்புகார் சட்டமன்ற தொகுதியில் உள்ள தரங்கமபாடி தாலுக்கா ஆயப்பாடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் உள்ள வாக்குச்சாவடியில் காலை முதல் வாக்குப்பதிவு நடைபெற்று வந்தது.
இந்நிலையில் திமுக சார்பில் வாக்குசாவடி முகவராக இருந்த சந்திரசேகர் என்பவர் ஓட்டு போட வரும்போது பொதுமக்களிடம் கை சின்னத்திற்கு மறைமுகமாக ஓட்டு கேட்டதாக கூறப்படுகிறது.
தகவல் அறிந்த அதிமுக மாவட்ட செயலாளர் பவுன்ராஜ் சம்பந்தப்பட்ட வாக்குசாவடி மையத்திற்கு சென்று தேர்தல் விதிமுறை மீறி எப்படி உள்ளே வாக்கு சேகரிக்கலாம் என்று திமுக முகவர் சந்திரசேகரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவரை சட்டையை பிடித்து தாக்கம் முற்பட்டதாக கூறப்படுகிறது.
உடன் அருகில் இருந்தவர்கள் இருவரையும் சமாதானப்படுத்தி அனுப்பி உள்ளனர் இச்சம்பவம் தொடர்பாக அதிமுக மாவட்ட செயலாளர் பவுன்ராஜ் தன்னை தாக்க முயன்றதாக சந்திரசேகர் சமூக வலைதளங்களில் வீடியோ பதிவிட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக புகார் எதுவும் அளிக்கப்படவில்லை என்றும் பிரச்சனை தொடர்பாக இருவரும் சமரசம் செய்து கொண்டதாக சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.