- முகப்பு
- மாவட்டச் செய்தி
- திருத்தணியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஒன்றன்பின் ஒன்றாக வாகனங்கள் இடித்து விபத்து
திருத்தணியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஒன்றன்பின் ஒன்றாக வாகனங்கள் இடித்து விபத்து
சுரேஷ் பாபு
UPDATED: Sep 8, 2024, 1:56:50 PM
திருவள்ளூர் மாவட்டம்
திருத்தணி சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் முருகப்பெருமானின் பிரசித்தி பெற்ற ஐந்தாம் படை திருக்கோயிலாகும்
இன்று ஞாயிற்றுக்கிழமை பொது விடுமுறை தினம் என்பதால் சுபமுகூர்த்த தினம் என்பதால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் மற்றும் அண்டை மாநிலமான ஆந்திர மாநிலம் மற்றும் கர்நாடக மாநிலம் போன்ற பகுதியிலிருந்து அதிகளவு பக்தர்கள் மலைக்கோவிலில் சாமி தரிசனம் செய்ய மலை கோவிலில் குவிந்தனர்
இதன் எதிரொலியாக மலைக் கோவிலில் இருந்து மலை அடிவாரம் வரை இரண்டு கிலோ மீட்டர் தூரம் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது
திருத்தணி முருகன் கோயில்
மலைக்கோவிலில் செல்லும் வழியில் சாமி தரிசனம் செய்துவிட்டு திரும்பிய சென்னையை சேர்ந்த வேன் ஒன்று முன்னே சென்ற ஆந்திர மாநில காருடன் மோதி அந்த கார் தமிழகத்தின் மற்றொரு காரின் மீது மோதியதால் மூன்று வாகனங்கள் ஒன்றின் பின் ஒன்றாக அடுத்தடுத்து மோதிக்கொண்டதால் ஆந்திராவைச் சேர்ந்த மூன்று பெண்கள் படுகாயம் அடைந்தனர்
சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சேதம் அடைந்த மூன்று வாகனங்களையும் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
இந்த சம்பவத்தின் காரணமாக மலை கோவிலில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது
Latest Thiruthani News
மலைக் கோவிலில் சாமி தரிசனம் செய்ய மலை தொடர்ந்து பக்தர்கள் குவிந்து வருவதால் திருத்தணியில் அரக்கோணம் சாலையில் ரயில் நிலைய சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது
திருக்கோயில் நிர்வாகம் மற்றும் திருத்தணி போலீசார் பொதுமக்கள் அதிகளவு சாமி தரிசனத்திற்கு வருவார்கள் என்று தெரிந்தும் போதிய முன்னேற்பாடுகள் போதிய கோயில் ஊழியர்கள் பணியிலும் போதிய போலீசார் பணியிலும் அதிக அளவு ஈடுபடவில்லை என்று பக்தர்கள் குற்றச்சாட்டு இதனால் வாகன நெரிசலில் பொதுமக்கள் பக்தர்கள் வாகனங்கள் சிக்கிக் கொண்டு தவித்தனர்.