• முகப்பு
  • மாவட்டச் செய்தி
  • ஒரு கிராமமே தேர்தலை புறக்கணித்து ஓட்டு போடாமல் உள்ளனர் அதிகாரிகள் பேச்சுவார்த்தை தோல்வியில்.

ஒரு கிராமமே தேர்தலை புறக்கணித்து ஓட்டு போடாமல் உள்ளனர் அதிகாரிகள் பேச்சுவார்த்தை தோல்வியில்.

சுரேஷ் பாபு

UPDATED: Apr 19, 2024, 10:18:17 AM

அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருத்தணி சட்டமன்ற தொகுதி பள்ளிப்பட்டு வட்டம் குமாரராஜிப்பேட்டை கிராமத்தில் 34,35, இரண்டு வாக்கு சாவடி மையத்தில் பொதுமக்கள் ஓட்டு போடாமல் முழுமையாக தேர்தலை புறக்கணிப்பு செய்துள்ளனர்

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி வட்டம் தச்சூர் பகுதியில் இருந்து மேற்கண்ட இந்த கிராமத்தில் வழியாக ஆந்திர மாநிலம் சித்தூர் வரை ஆறு வழிச்சாலைகளுக்கான பணிகள் தொடங்கியுள்ளது

இந்த கிராமத்தில் உள்ள இந்த கிராம மக்கள் வழிபடும் அருள்மிகு பொன்னியம்மன் மற்றும் கொல்லாபுரி அம்மன் திருக்கோயில்கள் முழுமையாக இடிக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்ததால்

இந்த கிராம மக்கள் இன்று ஓட்டு போடாமல் முழுமையாக தேர்தலை இரண்டு வாக்குச்சாவடி மையத்தில் புறக்கணிப்பு செய்துள்ளனர் அதிகாரிகள் தொடர்ந்து பேச்சுவார்த்தை செய்து வருகின்றனர் ஆனால் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்துள்ளது.

இந்த இரண்டு ஓட்டு சாவடி மையத்தில் இந்த கிராமத்தில் 952 ஓட்டுகள் உள்ளது ஆனால் யாரும் ஒரு ஓட்டு கூட போடாமல் அதிகாரிகள் காத்திருக்கும் காட்சிகளை படத்தில் காணலாம்.

தற்பொழுது இந்த இரண்டு வாக்குச்சாவடி மையத்தில் உள்ள வாக்காளர்களிடம் உதவி தேர்தல் நடத்தும் அதிகாரி மற்றும் காவல்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை செய்து வருகின்றனர்.

ஓட்டு போட வாங்கல் என்று அதிகாரிகள் அடித்தனர் யாரும் வராததால் அதிகாரிகளின் பேச்சுவார்த்தை தற்போது தோல்வியில் முடிந்துள்ளது.

கோயில்கள் எடுப்பதை கண்டித்து ஒரு கிராமமே தேர்தலை புறக்கணித்து ஓட்டுப் போடாமல் இருப்பதால் பள்ளிப்பட்டு வட்டத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 

  • 3

VIDEOS

Recommended