• முகப்பு
  • மாவட்டச் செய்தி
  • கிராமப்புற பெண்களின் ஆளுமை வளர்த்தல் என்ற தலைப்பில் கருத்தரங்கம் மற்றும் விருது வழங்கும் நிகழ்வு.

கிராமப்புற பெண்களின் ஆளுமை வளர்த்தல் என்ற தலைப்பில் கருத்தரங்கம் மற்றும் விருது வழங்கும் நிகழ்வு.

Bala

UPDATED: Oct 18, 2024, 7:51:55 AM

குற்றாலம்

புதுமை மற்றும் படைப்பாற்றல் மூலம் கிராமப்புற பெண்களின் ஆளுமை வளர்த்தல் என்ற தலைப்பில் குற்றாலம் ஸ்ரீ பராசக்தி கல்லூரியில் நாட்டு நலப்பணித் திட்டம் மற்றும் தவப்புதல்வி கிராமப்புற பெண்களின் ஆளுமை மற்றும் பொருளாதார வளர்ச்சி இயக்கத்தின் சார்பில் பெண்களின் பொருளாதார மேம்பாடு குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது.

இதில் சிறப்பு விருந்தினர்களாக மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் நாட்டு நலப்பணி திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் வெளியப்பன் அவர்களும் தவப்புதல்வி அமைப்பின் நிறுவனர் முனைவர் சுபத்ரா செல்லத்துரை அவர்களும் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.

கருத்தரங்கம்

கிராமப்புற தையர் கலைஞர்களை கொண்டு 20 நாட்களில் 2024 வண்ணமயமான மேலங்கி தயாரித்து கல்லூரி மாணவிகள் பெருமளவில் பங்குபெற்று காட்சி படுத்திய குளோபல் உலக சாதனை நிகழ்வில் பங்குபெற்ற குற்றாலம் ஸ்ரீ பராசக்தி கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்ட மாணவிகளுக்கு விருது மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. 

கல்லூரியில் இருந்து பெருமளவு மாணவிகளை பங்குபெற ஊக்குவித்த கல்லூரிக்கும், கல்லூரியின் முதல்வர் முனைவர் நாகேஸ்வரி அவர்களுக்கும், நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் முனைவர் அல்தாஜ் பேகம் அவர்களுக்கும் தவப்புதல்வி அமைப்பின் நிறுவனர் மற்றும் ஜே. சி. ஐ கன்னியாகுமரி பயோனியரின் தலைவர் முனைவர் சுபத்ரா செல்லத்துரை விருது மற்றும் சான்றிதழ் வழங்கி கௌரவித்தார்.

நாட்டு நலப்பணி திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் வெளியப்பன் அவர்கள் பேசும்பொழுது கிராமப்புறப் பெண்களின் வாழ்வியல் முன்னேற்றத்தில் நாட்டு நலப்பணி திட்ட தன்னார்வலர்கள் பங்காற்றுவது பெருமையளிக்கிறது.

ஒவ்வொரு மாணவியரும் காலத்திற்கேற்றாற்போல் தங்களுடைய திறன்களை வளர்த்தும், புதுமையான பொருட்களை உருவாக்குவதிலும் சந்தைப்படுத்துதலிலும் தங்களை மேம்படுத்தி, பொருளாதார ரீதியில் வளப்படுத்தி வீட்டின் வளர்ச்சிக்கும் நாட்டின் வளர்ச்சிக்கும் பெரும் பங்காற்ற வேண்டும் என வாழ்த்தி உரையாற்றினார்.

இக்கருத்தரங்கம் தங்களின் வாழ்விற்கு மட்டுமின்றி, பெண்களின் வாழ்வியலுக்கும் வழிவகுக்கும் நல்ல பல ஆலோசனைகள் வழங்கியது தங்களுக்கு மகிழ்ச்சி அளிப்பதாக மாணவிகள் தெரிவித்தனர்.

கருத்தரங்கம் மற்றும் விருது வழங்கும் நிகழ்வினை நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர்கள் முனைவர் அல்தாஜ் பேகம், முனைவர் லதா சிறப்பாகச் செய்திருந்தனர்.

 

VIDEOS

Recommended