மேயர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம். திமுக எதிர்ப்பு கவுன்சிலர்கள் 22 பேர் சுற்றுலா.

லட்சுமி காந்த்

UPDATED: Jul 28, 2024, 10:17:42 AM

காஞ்சிபுரம் மாநகராட்சி 

காஞ்சிபுரம் மாநகராட்சியில் அதிமுக, திமுக, பாஜக, காங்கிரஸ், பாமக, தமாக உள்ளிட்ட கட்சிகளும் சுயேட்சை கவுன்சிலர்களும் சேர்த்து மொத்தம் 51கவுன்சிலர்கள் இருந்துவருகிறார்கள்.

இந்த நிலையிலே மேயர் பதவியேற்ற நாள் முதலே எதிர்கட்சி கவுன்சிலர்கள் திமுக மேயர் மகாலட்சுமி யுவராஜ்-க்கு எதிராக போர்கொடி தூக்கி வந்த நிலையில் கடந்த சில மாதங்களாக திமுக கவுன்சிலர்களும் திமுக மேயருக்கு எதிராகவே போர்கொடி உயர்த்தி வந்தனர்.

இதன் காரணமாக திமுக மாவட்ட செயலாளர் கே.சுந்தர் தலைமையில் 6முறை பேச்சுவார்த்தை நடத்தியும், எந்தவிதமான பயன் ஏற்படாததால் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என.நேரு தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

திமுக கவுன்சிலர்கள்

அந்த பேச்சுவார்த்தையிலும் மேயர் மகாலட்சுமி யுவராஜ்யை மாற்ற வேண்டும் என திமுக எதிர்ப்பு கவுன்சிலர்கள் உறுதியாக தெரிவித்திருந்தனர்.எதிர்ப்பு கவுன்சிலர்களின் நிலைபாடு குறித்து தலைமைக்கு தெரிவிப்பதாக அப்போது அமைச்சர் தெவித்ததாகவும் சொல்லபடுகிறது.

இருந்தபோதிலும், மாமன்ற கூட்டங்களை புறக்கணித்ததுமட்டுமல்லாமல், திமுக உட்பட எதிர்கட்சிகளை சார்ந்தவர்கள் 18பேர் தங்களது நிலை குழுக்களை ராஜனாமாவும் செய்திருக்கிறார்கள்.

அதே போல் மேயருக்கு ஆதரவாக உள்ள 2-வது மண்டல குழு தலைவர் திமுக சந்துரு என்பவரை தகுதி இழக்கம் செய்ய வேண்டும் என மனு அளித்தனர். அதன் மீதும் ஆணையர் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. 

மேயருக்கு ஆதரவாக மாநகராட்சி ஆணையர் செந்தில் முருகன் ஒருதலை பட்சமாக செயல்படுவதாக கூறி மாமன்ற உறுப்பினர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.

District News Headlines in Tamil 

மாநகராட்சி ஆணையர் வருகை பதிவேட்டில் விதிமுறையை முறையாக கை பிடிக்காதது என தொடர் பிரச்சனைகளை எழுப்பி ஆணையர் அறையை முற்றுகையிடுவது என அவ்வப்போது எதிர்ப்பு கவுன்சிலர்கள் பல்வேறு பிரச்சனைகளை முன்நிறுத்தி அரசின் கவனத்தை ஈர்த்து வருகின்றனர்.

இந்த நிலையில் எதிர்ப்பு கவுன்சிலர்களின் தொடர் வலியுறுத்தலின் பெயரில் நாளை (29.07.2024) திங்கட்கிழமை நம்பிக்கை இல்லா தீர்மானம் மற்றும் அது தொடர்பான விவாதம் நடத்தப்படுமென மாநகராட்சி ஆணையர் சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையிலும் நாளுக்கு ஓர் பிரச்சனையை எதிர்ப்பு கவுன்சிலர்கள் தொடர்ந்து எழுப்பி வருகிறனர். 

இந்த நிலையில் நேற்று முன்தினம் காஞ்சிபுரம் புறநகர் பகுதியான சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை காரப்பேட்டை பகுதியில் உள்ள எம்.எம் லெகசி என்ற ஓட்டலில் தலைமை கழக அமைப்பு இணை செயலாளர் அன்பகம் கலை தலைமையில் திமுக எதிர்ப்பு கவுன்சிலர்கள் 20 பேரும் , மேயர் தரப்பு கவுன்சிலர்கள் இடையில் சமரசம் செய்ய பேச்சுவார்த்தை நடந்தது.

 

இதில் இருதரப்புக்கிடையேயான பிரச்சனை குறித்து கேட்டறிந்த அன்பகம் கலை , தலைமைக்கு எதிராக முடிவு எடுக்கும் கவுன்சிலர்கள் மீது கட்சி நடவடிக்கை எடுக்கும் என மறைமுகமாக எச்சரித்ததாகவும் சொல்லப்படுகிறது.

இந்நிலையில் நாளை திமுக மேயர் மகாலட்சுமி யுவராஜ்க்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் மற்றும் அது தொடர்பான விவாதம் நடைபெறவுள்ள நிலையில், 

திமுக | அதிமுக | பாஜக | பாமக

திமுகவை சேர்ந்த எதிர்ப்பு கவுன்சிலர்கள் 22 பேர்களுடன், அதிமுக 6, பாமக 2, பாஜக1,சுயேட்சைகள் 4 பேர் என 35 பேர் தங்களது குடும்பத்தினரோடு காஞ்சிபுரத்திலிருந்து சுற்றுலா புறப்பட்டு மாமல்லபுரம் ECR சாலையில் தனியார் விடுதியில் தங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

அதே போல் மற்றொருபுறம் மேயர் தரப்பு ஆதரவு கவுன்சிலர்கள் 10 க்கும் மேற்பட்ட கவுன்சிலர்கள் ஊட்டி சென்றிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில் இரு தரப்பும் மாறி மாறி கவுன்சிலர்களை சுற்றுலா அழைத்து சென்று இருக்க கூடிய நிலையில் , நாளைய தினம் நம்பிக்கை இல்லா தீர்மானம் மற்றும் அது தொடர்பான விவாதம் , நடைபெறவுள்ள நிலையில் , "திமுக தலைமை கழகம் எச்சரித்து இருக்கக்கூடிய நிலையில் , எதிர்ப்பு திமுக கவுன்சிலர்கள் நம்பிக்கை இல்லா தீர்மான கூட்டத்தில் பங்கேற்பார்களா எனும் சந்தேகம் எழுந்திருக்கிறது. 

திமுக மேயரை பதவியிரக்கம் செய்ய ஐந்தில் ஒரு பங்கு வேண்டும் என்ற நிலையில் அதாவது மொத்தம் 51 கவுன்சிலர்களில் 41 பேர் எதிராக வாக்களித்தால் மட்டுமே மேயரை பதவி இழக்கம் செய்ய முடியும். இதனால் திமுக அதிர்ப்தி கவுன்சிலர் சைலஜாசேகர் மற்றும் அதிமுக கவுன்சிலர்கள் இரண்டு பேர் மேயருக்கு எதிராக வாக்களிப்பார்களா அல்லது,  

நம்பிக்கை இல்லா தீர்மானம்

திமுக எதிர்ப்பு கவுன்சிலர்கள் மற்றும் மேயர் தரப்பு ஆதரவு கவுன்சிலர்கள் எவரேனும் மேயருக்கு எதிர்ப்பாக வாக்களிப்பார்களா? யார் யாரெல்லாம் மேயருக்கு எதிராக வாக்களிப்பார்கள் என்பது நாளை நடைபெறக்கூடிய நம்பிக்கை இல்லா தீர்மானத்தில் தெரியவரும்.

இது தொடர்பாக மாமன்ற உறுப்பினர் ஒருவர் கூறும் போது, எதிர்ப்பு கவுன்சிலர்கள் 36 பேரும் கூட்டத்தில் பங்கேற்கப் போவதில்லை , அதனால் மேயர் மகாலட்சுமி யுவராஜ் யிடம் இரண்டு மாதத்தில் உங்கள் பலத்தை மாமன்ற கூட்டத்தில் நிரூபியுங்கள் என ஆணையர் உத்தரவு விட வாய்ப்புள்ளது என தெரிவித்தார்.

 

VIDEOS

Recommended