போலீஸ் சீருடை அணிந்து சுற்றி திரிந்த போலி பெண் உதவி ஆய்வாளர்.

முகேஷ்

UPDATED: Nov 1, 2024, 12:21:57 PM

கன்னியாகுமரி மாவட்டம்

வடசேரி பகுதியில் பியூட்டி பார்லர் வைத்திருக்கும் உரிமையாளர் வடசேரி காவல் நிலையத்தில் ஒரு புகார் ஒன்று அளித்தார். 

அந்த புகாரில் தனது பியூட்டி பார்லருக்கு உதவி ஆய்வாளர் சீருடை அணிந்து வந்த ஒருவர் பேசியல் செய்துவிட்டு பணம் கொடுக்கவில்லை என புகார் அளித்தார். 

இதன் அடிப்படையில் வடசேரி போலீசார் விசாரணை செய்து அபி பிரபா என்ற பெண்ணை கைது செய்தனர். 

அபி பிரபா (34) பெரியகுளம் வடுகப்பட்டி தேனி மாவட்டம் பகுதியை சேர்ந்தவர் ஆவார். இவரது கணவர் முருகன் (66) என்பவரை 13 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்.

திருமணமான ஆறு வருடங்களுக்கு பின்னர் மாறுபட்ட கருத்து காரணமாக இவர்கள் பிரிந்தனர்.

பின்பு அபி பிரபா சென்னை தி நகரில் உள்ள ஒரு நிறுவனத்தில் சேலை பிரிவில் மேற்பார்வையாளராக பணியாற்றி வந்தார்.

அப்போது அங்கு பணியாற்றிய சக ஊழியரான பிரித்விராஜ் என்பவருடன் நட்பு ஏற்பட்டது. 

மூன்று மாதங்களுக்கு முன்பு இருவரும் திருவனந்தபுரத்தில் ஜவுளி துறையை சேர்ந்த சக ஊழியரின் திருமணத்தில் கலந்து கொண்டனர். அந்த பயணத்தின் போது ரயிலில் பயணித்த பரமார்த்தலிங்கபுரம் பள்ளிவிளையை சேர்ந்த சிவா என்ற நபரிடம் அபி பிரபாவிற்கு பழக்கம் ஏற்படுகிறது. 

பின்னர் அபி பிரபா சிவாவிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்துகிறார்.

Police 

காவல்துறையில் பணிபுரிபவரை மட்டுமே எனது பெற்றோர் திருமணம் செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தியதாக சிவா அபி பிரபாவிடம் கூறியுள்ளார்.

இதனால் அபி பிரபா தனது நண்பரான பிரித்விராஜ் மூலமாக போலீஸ் சீருடை எடுத்து சென்னை திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் இருந்து பல புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை போலீஸ் சீருடையில் எடுத்துள்ளார். 

இந்த வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை சிவா தனது பெற்றோரிடம் காண்பித்து அவர்களிடம் சம்மதம் பெற்றார். 

28.10.2024 அன்று நாகர்கோவில் WCC அருகே உள்ள ஒரு பியூட்டி பார்லருக்கு சென்று அங்கு பேசியல் செய்து கொண்ட அபி பிரபா தான் வடசேரி காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணிபுரிவதாக கூறி பணம் கொடுக்காமல் சென்றுள்ளார். 

இதேபோன்று 31.10.2024 மீண்டும் அந்த பியூட்டி பார்லருக்கு பேசியல் செய்ய சென்றுள்ளார். அப்போது சந்தேகம் அடைந்த பூட்டி பார்லர் உரிமையாளர் வடசேரி காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

அங்கு விரைந்து வந்த போலீசார் அபி பிரபாவை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை செய்து செல்போனில் இருந்த புகைப்படங்கள் வீடியோக்கள் அனைத்தையும் கைப்பற்றி அவர் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டார்.

 

VIDEOS

Recommended