சிறுதொழில் மீனவர்களின் கலந்தாய்வு கூட்டம்.

கார்மேகம்

UPDATED: Oct 8, 2024, 8:16:56 AM

இராமநாதபுரம் மாவட்டம்

சின்ன ஏர்வாடி கிராமத்தில் மன்னார் வளைகுடா கடல் பகுதியை சார்ந்த 10- க்கும் மேற்பட்ட மீனவ கிராம நாட்டுப்படகு மற்றும் சிறுதொழில் மீனவர்களின் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது

இக் கூட்டத்தில் நாட்டுப்படகு மீனவர் எஸ். முருகராஜ் தலைமை தாங்கினார், சி.ஐ.டி.யு. கடல் தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் எம்.சிவாஜி , எம். கருணாமூர்த்தி கீழமுந்தல் எஸ்.வேலுச்சாமி சின்ன ஏர்வாடி டி.மணோகரன் நரிப்பையூர் எ. இம்மானுவேல் ஏர்வாடி நம்புராஜன் ரமேஸ் முருகேசன் சக்திகுமார் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் பின்வரும் தீர்மானங்கள் கொண்டுவரப்பட்டன.

( தீர்மானங்கள்)

நாட்டுப்படகு சிறுதொழில் மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடிப்பு தொழிலுக்கு ஏற்பட்டுவரும் தொடர் நெருக்கடிகளை களைய வேண்டும்.

மீன்வளத்துறையின் செயல்பாடுகள் மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கக் கூடியதாக இருக்க வேண்டும்

மாவட்ட ஆட்சியர் மீன்வளத்துறை அரசு செயலர் மற்றும் இயக்குநர் மீனவர்கள் பங்கேற்கும் மீனவர்கள் குறைதீர்க் கூட்டம் நடத்த வேண்டும்.

அரசால் தடைசெய்யப்பட்ட சுறுக்குமடி மீன்பிடிப்பை முற்றாக நிறுத்த மீன்வளத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கடலுக்குள் சிலிண்டர் பயன்படுத்தி மீன் பிடிப்பதை தடைசெய்ய வேண்டும்.

மீனவர்கள் சட்ட விரோத மீன்பிடிப்புக்கு  மறைமுக ஆதரவு அளிக்கும் மீன்வளத்துறை அதிகாரிகள் மீது உடன்  நடவடிக்கை எடுக்க வேண்டும்

மீனவர்கள் கோரிக்கை குறித்து உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் கொண்டுவரப்பட்டன

இக் கோரிக்கைகள் குறித்து எதிர் வரும் 23/10/2024- முதல் இராமநாதபுரம் மீன்வளத்துறை துணை இயக்குநர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம் நடத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக கடல் தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் எம்.கருணாமூர்த்தி கூறினார். 

 

VIDEOS

Recommended