- முகப்பு
- மாவட்டச் செய்தி
- காட்டேரியில் ஏரியில் சடலமாக மீட்கப்பட்ட காவலாளி.
காட்டேரியில் ஏரியில் சடலமாக மீட்கப்பட்ட காவலாளி.
L.குமார்
UPDATED: Apr 18, 2024, 3:08:58 PM
கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூரில் அமைந்துள்ளது காட்டேரி. இந்த ஏரியின் பெரும்பாலான பகுதி ஆக்கிரமிப்பின் உச்சத்தில் உள்ளதால் ஏரியன் நடுவே ஆங்காங்கே சவுண்டு மண் கடத்தப்பட்ட இடங்களில் மழைநீர் தேங்கியுள்ளது.
இந்த மழை நீர் தேங்கியுள்ள பள்ளத்தில் சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஒருவர் சடலமாகக் கிடப்பதாக ஆரம்பம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த ஆரம்பாக்கம் போலீசார் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் உடலை மீட்டு ஏரியின் கரை பகுதிக்கு கொண்டு வந்தனர்.
தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் இறந்து கிடந்தவர் அருகாமையில் உள்ள சண்முகம் என்பவரது மாந்தோப்பு காவலாளி என்பதும் அவர் சுண்ணாம்பு குளம் அடுத்த ஓபசமுதிரம், சாலை கண்டிகையை சேர்ந்த விஜி (42) என்பது தெரிய வந்தது.
இதைத் தொடர்ந்து காவலாளி விஜி நள்ளிரவில் கும்மிருட்டு பகுதியில் உள்ள ஏரி பகுதிக்கு செல்ல வேண்டிய அவசியம் என்ன? அவர் கொலை செய்யப்பட்டாரா அல்லது ஏரியில் தவறி விழுந்து உயிரிழந்தாரா என்ற பல கோணங்களில் ஆரம்பம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

VIDEOS
திருவாரூர் அருகே பழமையான பாவா செய்யது சாதாத் அகமது மவுலானா வலியுல்லாஹ் தர்காவில் 83வது கந்தூரி விழா.
திருச்சி அருகே ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்தால் தான் இறப்பு சான்றிதழ் - அரசு மருத்துவரின் அடாவடி பேச்சு