• முகப்பு
  • மாவட்டச் செய்தி
  • திருச்சி அருகே அரசு பேருந்தில் இருந்து தவறி விழுந்த, 7ம் வகுப்பு மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்

திருச்சி அருகே அரசு பேருந்தில் இருந்து தவறி விழுந்த, 7ம் வகுப்பு மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்

JK

UPDATED: Jul 2, 2024, 6:38:19 PM

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே வானதிரையான் பாளையம் அந்தோணியார் கோயில் தெருவைச் சேர்ந்த மரிய அலெக்ஸாண்டர்- சுடர்மணி தம்பதி இவர்களுக்கு 3பெண் குழந்தைகள்.

மூத்த மகள் பிபிக்‌ஷா (12). இவர் புதூர்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 7ம்வகுப்பு பயின்று வந்தார் .

இவர் நேற்று காலை வழக்கம்போல பள்ளிக்குச் செல்ல வானதிரையான் பாளையம் பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்தார். விரகாலூரில் இருந்து சத்திரம் பேருந்து நிலையம் செல்லும் அரசு பேருந்தில் ஏறினார்.

காலை நேரம் என்பதால் பேருந்த கூட்டம் அதிகமாக இருந்ததால் பேருந்தில் படிக்கட்டில் பிபிக்‌ஷா நின்றதாக கூறப்படுகிறது. அப்போது பேருந்து அப்பகுதியில் உள்ள ஒரு வேகத்தடையில் ஏறி இறங்கிய போது, படிக்கட்டில் நின்று கொண்டிருந்த பபிக்ஷா இருந்து தவறி விழுந்தார்.

அப்போது பாராத விதமாக பேருந்தில் பின்புற சக்கரம் பிபிக்‌ஷாவின் இடுப்பில் ஏறி இறங்கியது. படுகாயமடைந்த பிபிக்‌ஷா திருச்சி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து 

மேல் சிகிச்சைக்காக, திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி இன்று காலை பபிக்ஷா பரிதாபமாக உயிரிழந்தார். 

இந்த விபத்தை குறித்து ஏற்கனவே திருச்சி மாவட்டம் கல்லக்குடி காவல் நிலையத்தில் குறித்து வழக்குப்பதிவுச் செய்து அரசு பேருந்து ஓட்டுனர் தங்கதுரை (50), நடத்துனர் (35) ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மருத்துவமனையில் குழந்தை இறந்ததை கண்ட அவரது பெற்றோர்கள் கதறி அழுதனர்.

உயிரிழந்த பிபிக்‌ஷாவின் தாயார் சுடர்மணி கூறியபோது, "பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனர் கவனக் குறைவால் தான் எனது மகள் உயிரிழந்திருக்கிறார். அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பேட்டி- 1)சுடர்மணி, தாய்.

2) ஆனந்தகுமார், தாய் மாமன்.

 

VIDEOS

Recommended