காவல் நிலையத்தின் வாசலிலேயே தாலி கயிறை கட்டிய 19 வயதுடைய இளைஞர்

செந்தில் முருகன்

UPDATED: Jun 18, 2024, 6:27:20 AM

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை கவரத் தெருவை சேர்ந்தவர் மூர்த்தி மகன் கிருஷ்ணகுமார் (வயது 19). தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டுனராக பணியாற்றி வந்த இவர் கடந்த ஆறு மாதங்களாக மயிலாடுதுறை கொத்தத்தெருவை சேர்ந்த கோபிநாதன் மகள் ஜெயலட்சுமி (வயது 19) என்பவரை காதலித்து வந்துள்ளார்.

இதையடுத்து ஜெயலட்சுமி வேலை பார்த்து வந்த பாத்திர கடையிலிருந்து வேலையை விட்டு நிறுத்திய அவரது பெற்றோர் பின்னர் அவரை வீட்டைவிட்டு வெளியே அனுப்பவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த கிருஷ்ணகுமார் கடந்த ஏப்ரல் 26-ஆம் தேதி ஜெயலட்சுமி யின் வீட்டு வாசலில் பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடத்தினார்.

இதற்காக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட கிருஷ்ணகுமார் ஜாமினில் வெளிவந்தார். இதனிடையே ஜெயலட்சுமியின் பெற்றோர் அவரை வேலைக்காக ஏப்ரல் 28-ஆம் தேதி சென்னைக்கு அனுப்பி வைத்தனர்.

ஆனால் ஜெயலட்சுமி சில நாட்களிலேயே அங்கிருந்து யாரிடமும் சொல்லாமல் மயிலாடுதுறையில் உள்ள காதலன் கிருஷ்ணகுமாரின் வீட்டுக்கு வந்து விட்டார்.

இதுகுறித்து ஜெயலட்சுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் இன்று இரு தரப்பினரையும் போலீசார் காவல் நிலையத்திற்கு வரவழைத்து விசாரித்துள்ளனர்.

அப்போது இருவருக்கும் 19 வயதே ஆவதால் இரண்டு வருடங்கள் முடிந்த பின்னர் திருமணம் செய்து கொள்ளலாம் என போலீசார் கிருஷ்ணகுமாருக்கு அறிவுரை வழங்கி சமரசம் செய்து அனுப்பி வைத்ததாக தெரிகிறது.

ஆனால் காவல் நிலையத்தை விட்டு வெளியே வந்த கிருஷ்ணகுமார் தான் மறைத்து வைத்திருந்த தாலியை எடுத்து காவல் நிலையம் வாசலிலேயே ஜெயலட்சுமிக்கு தாலி கட்டி அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது.

போதை பழக்கத்திற்கும், குற்ற வழக்குகள் உள்ள கிருஷ்ணகுமார் தங்களது மகளை கொன்றுவிடுவான் என்றும்’ மகளை மீட்டு தங்களிடம் ஒப்படைக்க காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெற்றோர்கள் புகார் தொவித்துள்ளனர்.

ஆண்களின் திருமண வயது 21 ஆவதற்குள் காவல்நிலைய வாசலில் மஞ்சள் கயிற்றை கட்டி காதலியை காதலன் அழைத்து சென்ற சம்பவம் பரபரபப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை செய்து நடத்தி வருகின்றனர்.

பேட்டி: தேவி பெண்ணின் சகோதரி

 

VIDEOS

RELATED NEWS

Recommended