- முகப்பு
- மாவட்டச் செய்தி
- ஆற்காடு அருகே 14 வயது சிறுவன் வெயிலில் மயங்கி பலி.
ஆற்காடு அருகே 14 வயது சிறுவன் வெயிலில் மயங்கி பலி.
பரணி
UPDATED: Apr 29, 2024, 8:34:25 PM
ராணிப்பேட்டை மாவட்டம் ரத்தினகிரி அடுத்த டிசி குப்பம் பகுதியை சேர்ந்தவர் சத்யா வயது 43 இவர் முன்னாள் ராணுவ வீரர் இவரது மனைவி வெண்ணிலா வயது 40 இவர்களுக்கு அர்ஷன் என்கிற 14 வயது மகனும், பரத் வயது 12 ஆகிய இரு மகன்கள் உள்ளனர்
இந்த நிலையில் சத்யா தனது மனைவி மற்றும் இரு பிள்ளைகளை அழைத்துக்கொண்டு அவரது குலதெய்வ கோவிலான பக்கத்து கிராமத்தில் உள்ள நத்தம் பகுதியில் மலை மீது அமைந்துள்ள மூங்கில்வாழி அம்மன் கோவிலுக்கு நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக மலை அடிவாரத்தில் இருந்து நடை பயணமாக சென்றுள்ளனர் அப்போது அதிகப்படியான வெயிலின் காரணமாக நடந்து சென்று கொண்டிருந்த அர்ஷன் திடீரென மயங்கி விழுந்தார்.
உடனடியாக அவரை அருகே இருந்த தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர் அங்கு பரிசோதனை செய்து மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்
இது குறித்து இரத்தினகிரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திய வருகின்றனர் குடும்பத்துடன் குலதெய்வ கோவிலுக்கு நேர்த்திக்கடன் செலுத்துவதற்கு சென்ற 14 வயதுடைய சிறுவன் வெயில் தாக்கம் காரணமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

VIDEOS
திருவாரூர் அருகே பழமையான பாவா செய்யது சாதாத் அகமது மவுலானா வலியுல்லாஹ் தர்காவில் 83வது கந்தூரி விழா.
திருச்சி அருகே ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்தால் தான் இறப்பு சான்றிதழ் - அரசு மருத்துவரின் அடாவடி பேச்சு