- முகப்பு
- மாவட்டச் செய்தி
- ராஜபாளையத்தில் மூன்றாவது நாளாக அரை மணி நேரத்திற்கும் மேல் பரவலாக கன மழை
ராஜபாளையத்தில் மூன்றாவது நாளாக அரை மணி நேரத்திற்கும் மேல் பரவலாக கன மழை
அந்தோணி ராஜ்
UPDATED: May 15, 2024, 7:23:32 AM
District News
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் கத்திரி வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்த நிலையில், கடந்த 12ம் தேதி மாலை வெப்ப சலனம் காரணமாக சுமார் அரை மணி நேரம் கன மழை பெய்தது.
நேற்று பகலில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்த நிலையில், 3 மணிக்கு மேல் 1 மணி நேரத்திற்கும் மேல் கன மழை பெய்தது. மேலும் இரவு வரை சாரல் மழை பெய்தது.
Virdhunagr District News
இரண்டு நாட்களாக தொடர்ந்து மழை பெய்ததால் இன்று பகலில் வெயிலின் தாக்கம் குறைந்து காணப்பட்டது.
இந்த நிலையில் இன்று மூன்றாவது நாளாக இரவு 7 மணிக்கு மேல் நகர் பகுதிகள் மற்றும் நகரை ஒட்டி அமைந்துள்ள தென்றல் நகர், திருவள்ளுவர் நகர், வேலாயுதபுரம், வஉசி நகர், மில் கிருஷ்ணாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் அரை மணி நேரத்திற்கும் மேல் மழை பெய்தது.
இதனால் குளிர்ச்சியான சூழல் நிலவுவதால் பொது மக்களும், தொடர் மழை காரணமாக கண்மாய்களுக்கு தண்ணீர் வரத்து அதிகரிப்பதால் விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

VIDEOS
திருவாரூர் அருகே பழமையான பாவா செய்யது சாதாத் அகமது மவுலானா வலியுல்லாஹ் தர்காவில் 83வது கந்தூரி விழா.
திருச்சி அருகே ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்தால் தான் இறப்பு சான்றிதழ் - அரசு மருத்துவரின் அடாவடி பேச்சு