• முகப்பு
  • மாவட்டச் செய்தி
  • தேனி மாவட்டம் வைகை அணையில் இருந்து மதுரை திண்டுக்கல் மாவட்டங்களுக்கு 900 கன அடி தண்ணீர் திறப்பு.

தேனி மாவட்டம் வைகை அணையில் இருந்து மதுரை திண்டுக்கல் மாவட்டங்களுக்கு 900 கன அடி தண்ணீர் திறப்பு.

ராஜா

UPDATED: Jul 3, 2024, 7:41:43 PM

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே அமைந்துள்ள மொத்தம் 71 அடி உயரம் கொண்ட வைகைஅணையில் இருந்து மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களிலுள்ள இரு போக சாகுபடி நிலங்களின் முதல் போக சாகுபடிக்காக விநாடிக்கு 900 கன அடி வீதம் இன்று முதல் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

அணையின் சிறிய மதகுகள் வழி சென்று பெரியார் பிரதான கால்வாய் வழியாக செல்லும் இந்த தண்ணீரை தேனி மதுரை திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர்கள் திறந்து வைத்தனர். 

திறந்து வைத்து தண்ணீருக்கு மலர் தூவினர் அணையில் நீர் இருப்பை பொருத்து மொத்தம் 6739 மில்லியன் கன அடி தண்ணீர் திறக்கப்பட திட்டமிடப்பட்டுள்ள நிலையில் இதில் 45 நாட்களுக்கு முழுமையாகவும் 75 நாட்களுக்கு முறை வைத்தும் தண்ணீர் திறக்கப்படும் என பொதுப்பணித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தண்ணீரின் மூலம் மதுரை திண்டுக்கல் மாவட்டங்களில் உள்ள 45,041 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது.

கடந்த ஆண்டு அணையில் போதிய நீர் இல்லாததால் நவம்பர் மாதத்தில் திண்டுக்கல் ,மதுரை மாவட்டத்தில் உள்ள இருபோக சாகுபடி நிலங்களின் முதல் போக சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் இந்த ஆண்டு அணையில் போதிய நீர் இருப்பு கிடைத்துள்ளதால் வழக்கமாக திறக்கப்படுவது போலவே ஜூலை மாதத்தில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் பாசனப்பகுதியில் உள்ள விவசாய நிலங்களுக்கு முழுமையாக தண்ணீர் சென்று சேர வாய்ப்புள்ளதால் பாசன விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

 

VIDEOS

RELATED NEWS

Recommended