• முகப்பு
  • மாவட்டச் செய்தி
  • இணை சார்பதிவாளர் அலுவலகத்தில் ஆறு மணி நேரத்திற்க்கும் மேலாக லஞ்ச ஒழிப்பு காவல் துறையினரின் சோதனையில் 87500 பறிமுதல்

இணை சார்பதிவாளர் அலுவலகத்தில் ஆறு மணி நேரத்திற்க்கும் மேலாக லஞ்ச ஒழிப்பு காவல் துறையினரின் சோதனையில் 87500 பறிமுதல்

ராஜா

UPDATED: Jul 13, 2024, 5:37:57 AM

சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

தேனி மாவட்டம் பெரியகுளம் தென்கரை பகுதியில் 2 எண் இணை சார் பதிவாளர் அலுவலகத்தில் இன்று காலை முதல் அதிக அளவில் பத்திரப்பதிவு நடைபெற்று வருவதாக தேனி மாவட்ட லஞ்ச ஒழிப்பு காவல் துறையினருக்கு வந்த ரகசிய தகவலின் அடிப்படையில் மாலை 4 மணி அளவில் தேனி மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை துணை கண்காணிப்பாளர் சுந்தர் ராஜா தலைமையில் இரண்டு ஆய்வாளர்கள் உட்பட 10 பேர் கொண்ட லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் இணை சார் பதிவாளர் அலுவலகத்தில் சோதனையில் ஈடுபட்டனர்.


Latest Theni District News

இந்நிலையில் மாலை 4 மணிக்கு துவங்கிய சோதனையானது இரவு 10 மணிக்கும் மேல் நடைபெற்றது. 6 மணி நேரமாக இணை சார்பதிவாளர் அலுவலகம் முழுவதும் முழுமையாக சோதனையிட்டதில் கணக்கில் வராத 87,500 ரூபாயை லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் கைப்பற்றினர்.

மேலும் இன்று அந்த அலுவலகத்தில் இன்று அதிக அளவில் பத்திரப்பதிவு நடைபெற்றுள்ளதால் பதிவு செய்யப்பட்ட அனைத்து ஆவணங்களையும் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் சோதனை மேற்கொண்டனர்.


Latest Theni News & Live Updates,

மேலும் ஆறு மணி நேரமாக நடைபெற்ற இந்த சோதனையில் கணக்கில் வராத 87500 ரூபாய் கைப்பற்றப்பட்டதோடு இணை சார் பதிவாளர் பரமேஸ்வரி மற்றும் அலுவலக உதவியாளர்கள் 2 நபர்கள் உள்ளிட்ட மூன்று நபர்கள் மீது லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

 

VIDEOS

Recommended