- முகப்பு
- மாவட்டச் செய்தி
- 58 ஆதிதிராவிட குடும்பத்தினர் இலவச வீட்டு மனை பட்டா வழங்கக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு.
58 ஆதிதிராவிட குடும்பத்தினர் இலவச வீட்டு மனை பட்டா வழங்கக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு.
ராஜ் குமார்
UPDATED: Aug 8, 2024, 6:32:39 PM
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி
பள்ளிப்பட்டு வட்டத்திற்குட்பட்ட கீச்சலம் கிராமத்தில் வசிக்கும் 58 ஆதிதிராவிட குடும்பங்களுக்கு கடந்த 16 ஆண்டுகளாக வீட்டு மனை பட்டா இல்லாததால் வீடின்றி ஒரு வீட்டில் மூன்று நான்கு குடும்பங்கள் வசித்து வருவதால் படுக்க இடம் இன்றி தவித்து வருவதாகவும்
புல எண் 45/16 உள்ள 2.40 ஏக்கர் அரசு புறம்போக்கு இடத்தில் 58 ஆதிதிராவிட குடும்பங்களுக்கு பட்டா வழங்கினால் குடிசை கட்டி வாழ்வதற்கு ஏதுவாக இருக்கும்
இதுகுறித்து பலமுறை அதிகாரிகளிடத்தில் மனு கொடுத்தோம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் இதனால் ஏழை ஆதிதிராவிட மக்களுக்கு குடும்பங்களுக்கு மாவட்ட ஆட்சியர் உடனடியாக பட்டா வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை மனு அளித்தனர்.
ALSO READ | உணவில் கலக்கும் மைக்ரோ பிளாஸ்டிக்.
இந்த மனுக்கொடுக்கும் நிகழ்வில் விடுதலை சிறுத்தைகள் கட்சி திருவள்ளூர் மேற்கு மாவட்ட துணை அமைப்பாளர் கே ஈஸ்வரன், ஆதி திராவிட நலத்துறை அரசு குழு தலைவர் நீலவானத்து நிலவன், மண்டல செயலாளர் சித்தார்த்தன், திருவலாங்காடு ஒன்றிய செயலாளர் பன்னீர்செல்வம், வழக்கறிஞர் ஜார்ஜ் முல்லர் ஆகியோர் உடன் இருந்தனர்.