• முகப்பு
  • மாவட்டச் செய்தி
  • திருச்சியில் உள்ள கார்கில் வீரர் நினைவிடத்தில் 52 அடி உயர தேசிய கொடி கம்பம் - இராணுவ உயரதிகாரிகள் பங்கேற்பு.

திருச்சியில் உள்ள கார்கில் வீரர் நினைவிடத்தில் 52 அடி உயர தேசிய கொடி கம்பம் - இராணுவ உயரதிகாரிகள் பங்கேற்பு.

JK

UPDATED: Aug 10, 2024, 11:38:39 AM

திருச்சி 

1999ம் ஆண்டு நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான கார்கில்போரின் 25ம்ஆண்டு வெற்றிவிழாவை முன்னிட்டு அப்போரில் 4 திரிகளை நேருக்கு நேர் சண்டையிட்டு அவர்களது முகாம்களை தரைமட்டமாக்கிவிட்டு அப்போரின் வெற்றிக்கு வித்திட்டு முதல் ராணுவ அதிகாரியாக வீரமரணமடைந்த “ஹீரோ ஆஃப் பாட்டாலிக்” என்ற பெருமைக்குரிய வீர்சக்ரா விருதுபெற்ற மேஜர் சரவணன் நினைவகத்தில் 52 அடிஉயர கொடிக்கம்பத்தில் தேசியக்கொடி ஏற்றப்பட்டு மேஜர் சரவணன் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தப்பட்டது.

Latest District News in Tamil

முன்னாள் தக்ஷிண்ய இராணுவ பிராந்திய தலைவர் மற்றும் NCC UDAAN அமைப்பின் தலைவர் மேஜர் ஜெனரல் இந்திரபாலன் முன்னிலையில், திருச்சி மாவட்ட வருவாய் அலுவலர் ராஜலக்ஷ்மி, என்சிசி மாணவர்படை தலைவர் கர்னல்.விஜயகுமார், மேஜர் சரவணன் நினைவு அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் செந்தில்குமார் மற்றும் டாக்டர்.சித்ரா உள்ளிட்ட இராணுவ உயரதிகாரிகள் மலர் வளையம் வைத்தும், நமது தேசியக்கொடிக்கு மரியாதை செலுத்தினர்.

VIDEOS

Recommended