- முகப்பு
- மாவட்டச் செய்தி
- தேனி மாவட்ட போயர் சமுதாய நலச்சங்கம் சார்பில் 4 ஆம் ஆண்டு மாணாக்கர்களுக்கு ஊக்கத்தொகை மற்றும் பரிசளிப்பு விழா.
தேனி மாவட்ட போயர் சமுதாய நலச்சங்கம் சார்பில் 4 ஆம் ஆண்டு மாணாக்கர்களுக்கு ஊக்கத்தொகை மற்றும் பரிசளிப்பு விழா.
இரா.இராஜா
UPDATED: Jun 17, 2024, 7:08:57 PM
தேனி அருகேயுள்ள வீரபாண்டி தனியார் திருமண மண்டபத்தில் தேனி மாவட்ட போயர் சமுதாய நல சங்கம் சார்பில் நான்காம் ஆண்டு மாணவர்களுக்கு ஊக்கத்தொகை மற்றும் பரிசளிப்பு விழா நிகழ்ச்சி சிறப்பாக நடந்தது.
தேனி மாவட்டம் வீரபாண்டியில் தனியார் திருமண மண்டபத்தில் நேற்று தேனி மாவட்ட போயர் சமுதாய நலச்சங்கம் சார்பில் 4 ஆம் ஆண்டு, மாணவ, மாணவியர் களுக்கான ஊக்கத்தொகை மற்றும் பரிசளிப்பு நிகழ்ச்சி நடந்தது.
இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட தலைவர் முருகேசன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் பாண்டியன் வரவேற்றார்.
கௌரவ ஆலோசகர் ராமசாமி முன்னிலை வகித்தார்.
மதுரை காமராஜர் பேராசிரியர் உமாராஜ், பொள்ளாச்சி ஆன்மீகச் செம்மல் ரவி, உழைக்கும் மக்கள் விடுதலைக் கழகம் கட்சியின் நிறுவனத் தலைவர் தேக்கமலை, பொருளாளர் ராஜாராம், திருப்பூர் கான்ட்ராக்டர் அழகையன், ஆகியோர் கௌரவ அழைப்பாளராக கலந்து கொண்டு உரையாற்றினார்கள்.
இவர்களுக்கு நிர்வாகிகள் சார்பில் நினைவுப் பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
நிகழ்ச்சியில் 10 மற்றும் 12ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் மாவட்ட அளவில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு முதல் பரிசாக ரூ.3 ஆயிரம், 2 ஆம் பரிசாக ரூ.2 ஆயிரம், 3 ஆம் பரிசாக ரூ. 1000 ம் என 6 பேருக்கு வழங்கினார்கள்.
தொடர்ந்து 10 மற்றும் 12ம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியர் களுக்கு சிறப்பு பரிசாக 70 நபர்களுக்கு வழங்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தேனி மாவட்ட போயர் சமுதாய நலச் சங்கம் நிர்வாகிகள் செய்திருந்தனர்.