- முகப்பு
- மாவட்டச் செய்தி
- மர்ம நபர்களால் 30 லட்சம் மதிப்புள்ள மீனவர்களின் வலைகள் மற்றும் உபகரணங்கள் தீயில் கருகின.
மர்ம நபர்களால் 30 லட்சம் மதிப்புள்ள மீனவர்களின் வலைகள் மற்றும் உபகரணங்கள் தீயில் கருகின.
S.முருகன்
UPDATED: Apr 24, 2024, 11:36:20 AM
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஒன்றியம், பழவேற்காடு அடுத்த கோட்டைகுப்பம் கிராம மீனவர்கள் பழவேற்காடு ஏரியில் பாடிவலை எனப்படும் வலையினை கொண்டு மீன் பிடிப்பது வழக்கம்
அதேபோல் நேற்று முன்தினம் வழக்கம் போல் வலையை எடுத்து சென்று மீன் பிடித்துவிட்டு கோட்டைக் குப்பம் அருகே ஆற்றின் கரையோரம் வைத்து விட்டு இரவு சென்று விட்டனர்.
காலையில் எழுந்து பார்த்தால் மர்ம நபர்களால் 30 லட்சம் மதிப்புள்ள மீனவர்களின் வலைகள் மற்றும் உபகரணங்கள் தீயில் கருகி போய் கிடந்தன.
இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த கோட்டைக்குப்பம் மீனவ மக்கள் காவல்துறையினரிடம் புகார் அளித்தும் திருவள்ளூர் வடக்கு மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் பொன்னேரி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான சிறுணியம் பி.பலராமனுக்கும் தகவல் தெரிவித்தனர்.
இந்த தகவலை அறிந்த திருவள்ளூர் வடக்கு மாவட்ட கழக செயலாளர் பி. பலராமன் பழவேற்காடு கோட்டை குப்பம் ஊராட்சியில் படகுமூலம் நேரில் சென்று பார்வையிட்டு ஆறுதல் கூறி மீனவர்களுக்கு தேவையான நிதி உதவி அளித்தார்.
இதில் கோட்டைக்குப்பம் கழக நிர்வாகிகள் பழவேற்காடு பகுதி கழக நிர்வாகிகள் கிளைக் கழக நிர்வாகிகள் பொதுமக்கள் உடன் இருந்தனர்.