27 மீனவ கிராமங்களை சேர்ந்த 3 ஆயிரத்து 500 பைபர் படகுகள் மீன்பிடிக்கச் செல்லவில்லை

செ.சீனிவாசன் 

UPDATED: May 20, 2024, 5:17:13 AM

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மிதமானது முதல் கனமழை பெய்து வருகிறது.

இதன் காரணமாக கோடை வெப்பம் தணிந்து பல பகுதிகளில் குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது. தமிழகத்தில் வரும் 25ஆம் தேதி வரை கனமழை நீடிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

இந்த நிலையில் வரும் 19, 20 ,21 ம் தேதி வரை தமிழக கடலோரப் பகுதிகளில் 55 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என மீனவர்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது

இதனால் நாகப்பட்டினம் மாவட்ட பைபர் படகு மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் நாகப்பட்டினம் மாவட்ட மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை தெரிவித்துள்ளது.

மேலும் கடல் சீற்றத்துடன் காணப்படும் எனவும் கடல் அலைகள் ஒன்றரை மீட்டர் உயரம் வரை எழக்கூடும் எனவும் கடல் நீரோட்டம் அதிக வேகத்தில் இருக்கும் , எனவும் இதனால் மீனவர்கள் மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள 27 கடலோர கிராமங்களுக்கு பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் எச்சரிக்கை அறிவிப்புகள் ஒலிபரப்பப்பட்டுள்ளது 

இதையடுத்து நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள நாகப்பட்டினம்,நாகூர், செருதூர்,காமேஸ்வரம்,வெள்ள பள்ளம் சாமந்தான்பேட்டை,நம்பியார் நகர், கல்லார், வேதாரணியம் கோடியக்கரை உள்ளிட்ட 27மீனவ கிராமங்களில் இருந்து 3 ஆயிரத்து 500 பைபர் படகுகள் மீன்பிடிக்க செல்லவில்லை.

இதனால் மீன்பிடி துறைமுகங்களில் படகுகள் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது இதனால் சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீன்பிடி தொழிலாளர்களுக்கு வேலை இழப்பு ஏற்பட்டுள்ளது.  

மீன்பிடி தடைகாலம் கடந்த ஏப்ரல் மாதம் 14ம் தேதி முதல் அமலில் இருப்பதால் ஆயிரம் விசைப்படகுகள் கடலுக்குள் செல்லாமல் உள்ளனர் திடீரென பெய்து வரும் கன மழையால் பழுதுபார்க்கும் பணியிலும் தொய்வு ஏற்பட்டுள்ளதாக மீனவர் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

VIDEOS

Recommended