திருச்சி அருகே பச்சமலையில் 250 லிட்டர் கள்ளச்சாராய ஊறல் அழிப்பு

JK

UPDATED: Jun 22, 2024, 6:19:27 AM

கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் அருந்தி 50க்கும் மேற்பட்டோர் மரணம் அடைந்ததையொட்டி தமிழகம் முழுவதும் மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறையினர் அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக நேற்று இரவு திருச்சி மாவட்டம், துறையூர் அடுத்த பச்சமலை வண்ணாடு ஊராட்சியில் உள்ள நெசக்குளம் பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சுவதற்காக ஊறல் போட்டிருப்பதாக மாவட்ட ஆட்சியருக்கு கிடைத்த ரகசிய தகவலின் படி மாவட்ட கலெக்டர் பிரதீப்குமார் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் ஆகியோர் தலைமையிலான நூற்றுக்கும் மேற்பட்ட காவல்துறையினர் திடீரென அதிரடி ஆய்வு மேற்கொண்டனர்.

அப்பொழுது நெசக்குளம் கிராம ஓடைப்பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சுவதற்காக போடப்பட்டிருந்த 250லிட்டர் சாராய ஊறல் மற்றும் கள்ளச்சாராயத்தை கண்டுபிடித்து அளித்தனர்.

மேலும் அப்பகுதியில் உள்ள மலைவாழ் கிராம மக்களை அழைத்து கள்ளச்சாராயத்தின் தீமைகளை எடுத்துக் கூறி அறிவுரை வழங்கினார்.

தொடர்ந்து மலை வாழ் மக்கள் அனைவரும் மாவட்ட ஆட்சியர் முன்பு எங்கள் பகுதிகளில் இனி கள்ளச்சாராயம் காய்ச்ச மாட்டோம் எனவும் கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்களுக்கு துணை செல்ல மாட்டோம் எனவும் தவறு செய்பவர்கள் மீதுநடவடிக்கை எடுக்க அறிவுறுத்துவோம் எனவும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

பச்சமலையில் நள்ளிரவில் நூற்றுக்கணக்கான காவல்துறையினர் அதிரடி வேட்டையில் ஈடுபட்ட சம்பவம் மற்றும் 250 லிட்டர் சாராய ஊறல் அழிக்கப்பட்ட சம்பவம் துறையூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

VIDEOS

Recommended