17 அதிவேக வாகனங்களுக்கு அபராதம் விதித்து பறிமுதல்.

முகேஷ்

UPDATED: Sep 3, 2024, 11:56:35 AM

கன்னியாகுமரி மாவட்டம்

கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.சுந்தரவதனம் I.P.S., அவர்களின் உத்தரவின் பேரில் பதிவெண் இல்லாத அதிவேக இருசக்கர வாகனங்கள், மூன்று நபர்களை ஏற்றிக்கொண்டு அபாயகரமாக ஓட்டுதல், ஸ்டண்ட் செய்தல் போன்ற விதிமீறல்களில் ஈடுபடும் இளைஞர்கள், மாணவர்கள் மீது தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

அதன் தொடர்ச்சியாக, இன்று 02.09.24 ம் தேதி, நாகர்கோவில் உதவி காவல் கண்காணிப்பாளர் யாங்சென் டோமா பூட்டியா I.P.S., அவர்களின் மேற்பார்வையில், நாகர்கோவில் போக்குவரத்து காவல்துறையினர் சாதாரண உடையில் ஸ்காட் கல்லூரி சாலையில் வாகன சோதனை நடத்தினர்.

Breaking News

அப்போது, சாலை விதிகளை மீறியும் குடிபோதையிலும் ஓட்டி வரப்பட்ட 17 வாகனங்களை சுமார் 75000 ரூபாய் அபராதம் விதித்து பறிமுதல் செய்தனர்.

பின்னர் இளைஞர்களின் பெற்றோர், உறவினர் வரவழைக்கப்பட்டு அறிவுரைகள் வழங்கியும், அபராதங்கள் செலுத்த வைக்கப்பட்டும், பதிவெண் தகடுகள் சரி செய்யப்பட்டும், வாகனங்கள் விடுவிக்கப்பட்டன.

Latest Nagercoil News

பள்ளி, கல்லூரி பகுதிகளில், அதிவேக வாகனங்களில் ஸ்டண்ட் செய்வது போன்ற விதிமீறல்களில் ஈடுபட்டு வரும் இளைஞர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

 

VIDEOS

Recommended