• முகப்பு
  • குற்றம்
  • ஸ்ரீபெரும்புதூர் அருகே போதை வஸ்துகளை வீட்டின் பீரோ மற்றும் கட்டிலுக்கு அடியில் பதுக்கி வைத்து விற்பனை செய்த கடையின் உரிமையாளர்.

ஸ்ரீபெரும்புதூர் அருகே போதை வஸ்துகளை வீட்டின் பீரோ மற்றும் கட்டிலுக்கு அடியில் பதுக்கி வைத்து விற்பனை செய்த கடையின் உரிமையாளர்.

லட்சுமி காந்த்

UPDATED: May 23, 2024, 7:17:11 PM

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த வளர்புரம் மண்ணூர் கூட்ரோடு பகுதியில் விஜயகுமார் வயது 60 என்பவர் சிறிய மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார்.

இவருடைய கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட போதை வஸ்துகள் விற்பனை செய்யப்படுவதாக போதைப் பொருள் தடுப்பு பிரிவிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. 

அதனைத் தொடர்ந்து காஞ்சிபுரம் மாவட்ட போதை தடுப்பு பிரிவு காவல்துறையினர் மண்ணூர் பகுதிக்கு விரைந்து சென்று கடையை சோதனை செய்து பார்த்தபோது ஒரு சில பாக்கெட்டுகள் மட்டுமே இருந்திருக்கின்றது.  

அதனால் அவருடைய வீட்டில் சென்று ஒவ்வொரு இடமாக தேடிப் பார்த்தபோது அரசால் தடை செய்யப்பட்ட" போதை பொருட்களை பெட்ரூமில் கட்டிலுக்கு அடியிலேயேயும், பீரோக்கு அடியிலேயேயும் பதுக்கி வைத்து விற்பனை செய்யவது கண்டறியப்பட்டது. 

இதனை அடுத்து சுமார் 40 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள குட்கா, போதை புகையிலை போன்ற போதை பொருட்களை பறிமுதல் செய்து விஜயகுமாரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்

ஸ்ரீபெரும்புதூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் வடமாநிலத்தவர்கள் அதிகம் வசித்து வருவதால், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட போதை வஸ்துகளை , பெரும்பாலான மளிகை கடைகளிலும், ஏராளமான டீக்கடைகளிலும், பெட்டி கடைகளிலும் விற்பனை செய்வது மிகவும் அதிகரித்து வருகிறது.

 

VIDEOS

Recommended