• முகப்பு
  • குற்றம்
  • மது போதையில் சக மீனவரை கத்தியால் குத்தி கொன்றதால் மீனவர் கிராமத்தில் பரபரப்பு.

மது போதையில் சக மீனவரை கத்தியால் குத்தி கொன்றதால் மீனவர் கிராமத்தில் பரபரப்பு.

செ.சீனிவாசன் 

UPDATED: May 18, 2024, 1:32:59 PM

நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள தலைஞாயிறு ஒன்றியம் வானவன்மகாதேவி, மீனவர் காலனியைச் சேர்ந்தவர் சக்திகுமார் (33) அதே ஊரில் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு ஒரு மாத கைக்குழுந்தையுடன் வசித்து வருகிறார்.

அவரது மைத்துனர் (தாய்மாமா மகன்) சிவக்குமார் (30) அதே ஊரில் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகிறார் இன்னும் திருமணம் ஆகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது வழக்கம்போல் நேற்று இரவு வானவன் மகாதேவி கடற்கரை பகுதியில் இருவரும் மது அருந்தி கொண்டிருந்தபோது, சக்திகுமார் சிவகுமாரிடம் ஏன் நீ இன்னும் திருமணம் செய்யவில்லை என கேட்டதாக தெரிய வருகிறது.

குடிபோதையில் இருவரும் விளையாட்டுத்தனமாக பேசிக் கொண்டிருக்கும் பொழுது வாக்குவாதம் முத்தி அதில் ஆத்திரம் அடைந்த சிவகுமார் அங்கு மீன்பிடி வலைகள் பழுது பார்க்கும் இடத்தில் மீன் வெட்டும் கத்தியை எடுத்துக் கொண்டு வந்து சக்திக்குமாரை கீழே தள்ளி கழுத்தில் சரமாரியாக குத்தியுள்ளார்,

இதில் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து போன சக்திக்குமாரை அருகில் இருந்த சக மீனவர்கள் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் அங்கு பரிசோதித்த மருத்துவர்.

குத்துப்பட்ட நபர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தார் அவரது உடலை மருத்துவ கல்லூரி மருத்துவமனை சவக்கிடங்கில் வைத்துள்ளனர்.

இது குறித்து வேட்டைக்காரன்இருப்பு காவல் துறையினர் கத்தியால் குத்திய குற்றவாளி சிவகுமாரை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். 

மீனவர் கிராமத்தில் குடிபோதையில் ஏற்பட்ட தகராறு மீனவர் கத்தியால் குத்தி படுகொலை செய்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

VIDEOS

Recommended