• முகப்பு
  • குற்றம்
  • வீட்டு வேலை செய்து சம்பாதித்த விதவைப் பெண்ணின் 3 லட்சம் பணத்தை ஏமாற்றிய கல்லூரி பேராசிரியர்.

வீட்டு வேலை செய்து சம்பாதித்த விதவைப் பெண்ணின் 3 லட்சம் பணத்தை ஏமாற்றிய கல்லூரி பேராசிரியர்.

செ.சீனிவாசன் 

UPDATED: May 18, 2024, 7:03:17 PM

நாகப்பட்டினம் மாவட்டம் திருமருகல் அடுத்துள்ள சியாத்தா மங்கை கிராமத்தைச் சேர்ந்த விதவைப் பெண்மணி உஷா, இவருடைய கணவர் ஒரு விபத்தில் பலியானார் இந்த சூழ்நிலையில் ஒரு மனநலம் குன்றிய மகனையும் ஒரு பெண் பிள்ளையும் வைத்துக்கொண்டு கஷ்டப்பட்டு வீட்டு வேலை செய்து வாழ்ந்து வருகிறார்,

இந்த சூழ்நிலையில் வீட்டு வேலை செய்து சேர்த்து வைத்த பணத்தில் தங்களுக்கு சொந்த வீடு வாங்க வேண்டும் என்ற ஆசையில், அதே பகுதியில் வசித்து வந்த திருவாரூர் திரு வி கா கல்லூரியில் பேராசிரியராக பணிபுரியும் ஜெய்சங்கர் என்பவர் தனது இடத்தை விற்பனை செய்வதாகவும் அதற்காக இந்த பெண்ணிடம் இருந்து மூன்று லட்சம் ரூபாய் கிரயமாக பெற்றுக்கொண்டு அக்ரிமெண்டில் மட்டும் கையெழுத்து போட்டு அனுப்பி இருக்கிறார்,

இந்த சூழ்நிலையில் பணம் பெற்றுக் கொண்ட கல்லூரி பேராசிரியர் இவரை ஏமாற்றும் வண்ணமாக வேறு ஒருவரிடம் அந்த இடத்தை விற்பனை செய்து விட்டார்,

இதுகுறித்து உஷா சம்பந்தப்பட்ட நபரிடம் கேட்டபோது பணம் தற்போது என்னிடம் இல்லை என்றும் கொடுக்கும்போது கொடுக்கிறேன் வாங்கிக்கொள் இல்லையென்றால் எங்கு வேண்டுமானாலும் சென்று உன்னால் முடிந்ததை பார்த்துக் கொள் என்று அவர்களை தகாத வார்த்தையால் பேசி அவரும் அவர் மனைவியும் சேர்ந்து கொலை மிரட்டல் விட்டதாக கூறப்படுகிறது,

இந்த சூழ்நிலையில் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்த உஷா, கடைசி உதவியாக தற்போது தனது மனநலம் பாதிக்கப்பட்ட மகனையும், மகளையும் அழைத்துக் கொண்டு நாகை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஹர்ஷ் சிங் அவர்களை சந்தித்து தன்னுடைய குறைகளை சொல்லி கதறினார், சம்பந்தப்பட்ட புகாரை பெற்றுக் கொண்ட காவல்துறை கண்காணிப்பாளர் நடவடிக்கை எடுப்பதாக உத்தரவாதம் கொடுத்து அவர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தார். 

இது குறித்து அந்த பெண்மணி செய்தியாளர்களிடம் கூறும்போது :

தன் கணவன் விபத்தில் இறந்த பிறகு தான் கூலி வேலை செய்து இரண்டு பிள்ளைகளையும் வளர்த்து வருவதாகவும், நிலம் விற்பனை செய்வதாக பணம் பெற்றுக் கொண்ட கல்லூரி பேராசிரியர் ஜெய்சங்கர் இடமும் கிரயம் செய்து கொடுக்காமல், பணத்தையும் கொடுக்காமல் ஏமாற்றி விட்டதாகவும் பலமுறை போராடியும் எந்த பயனும் இல்லை என்றும்,

சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து தனக்கு உதவி செய்து பணத்தை பெற்றுக் கொடுத்த வேண்டுமென்று வேண்டுகோள் விடுத்தார்.

தனது இரண்டு குழந்தைகளுடன் இளம் விதவைப் பெண் காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தஞ்சம் அடைந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

 

VIDEOS

Recommended