மாந்தோப்பில் பதுக்கி வைத்து கஞ்சா விற்பனை செய்த வாலிபர்.

லட்சுமி காந்த்

UPDATED: Nov 3, 2024, 8:52:31 AM

காஞ்சிபுரம் மாவட்டம்

ஸ்ரீபெரும்புதூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஏராளமான தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகின்றது. இந்த தொழிற்சாலைகளில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த தொழிலாளர்களும் ராஜஸ்தான், ஜார்கண்ட் ,பீகார் ,உத்தர பிரதேஷ், ஒரிசா, கொல்கத்தா போன்ற மாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்களும் பணிபுரிந்து வருகின்றார்கள்.  

இவர்களை மையப்படுத்தி சில சமூக விரோத கும்பல்கள் ஸ்ரீபெரும்புதூர் ஒரகடம் சுங்குவார் சத்திரம் உள்ளிட்ட பல பகுதிகளில் கஞ்சா ,அபின் , ஹெராயின் உள்ளிட்ட போதை வஸ்துகளும் , குட்கா புகையிலை போன்ற போதை பொருட்களும் தொடர்ந்து விற்பனை செய்து வருகின்றார்கள். 

காவல்துறையினரும் போதை வஸ்துகளை விற்பனை செய்யும் மொத்த விற்பனையாளர்களை பிடிக்காமல், தமிழக அரசுக்கு கணக்கு காண்பிக்க அங்கொன்றும் இங்கொன்றுமாக  நபர்களை பிடித்து சிறையில் அடைத்து வருகின்றார்கள்.

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த ராமாபுரம் பகுதியில் உள்ள மாந்தோப்பில், பாடிச்சேரி கிராமத்தைச் சேர்ந்த சூர்யா என்ற 24 வயதுடைய வாலிபர், ஸ்ரீபெரும்புதூர் டி எம் ஏ தெருவை சேர்ந்த விஷ்ணு வயது 26 ஆகிய இருவரும், தொடர்ந்து பல்வேறு குற்ற செயல்களை செய்து கொண்டு கஞ்சா விற்பனையில் ஈடுபடுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன் பேரில், ராமாபுரம் சென்ற காவல்துறையினர் சூர்யாவையும் விஷ்ணுவையும் கையும் களவுமாக பிடித்து மாந்தோப்பில் பதுக்கி விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த சுமார் ஒரு கிலோ 300 கிராம் எடையுள்ள கஞ்சாவை பறிமுதல் செய்து சூர்யா, விஷ்ணு ஆகிய இருவரையும் சிறையில் அடைத்தனர்.

 

VIDEOS

Recommended