• முகப்பு
  • குற்றம்
  • இந்தியன் வங்கி ஏடிஎம் மெஷினில் கள்ள நோட்டை டெபாசிட் செய்த நீதிமன்ற அலுவலக உதவியாளர் மற்றும் பெண் வழக்கறிஞர்.

இந்தியன் வங்கி ஏடிஎம் மெஷினில் கள்ள நோட்டை டெபாசிட் செய்த நீதிமன்ற அலுவலக உதவியாளர் மற்றும் பெண் வழக்கறிஞர்.

ராஜா

UPDATED: May 22, 2024, 1:59:26 PM

தேனி மாவட்டம் தேவாரம் தெற்கு தெருவை சேர்ந்தவர் விக்னேஷ் மூர்த்தி (31) .இவர் தேனி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் அலுவலக உதவியாளராக பணிபுரிந்து வருகின்றார் .பெரியகுளம் அருகிலுள்ள மேல்மங்கலத்தில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி நீதிமன்றத்தில் வேலை செய்து வருகின்றார்.

இவரிடம் பெரியகுளம் வடகரை SBI காலனி பகுதியைச் சேர்ந்த பெண் வழக்கறிஞரான ஜீவஜோதி (38) என்பவர் 60000 பணம் கொடுத்தால் வெளிநாட்டு டாலர் 10 லட்சம் வாங்கித் தருவதாக ஆசை வார்த்தை கூறி கடந்த மே12 ம் தேதி பெரியகுளத்தில் இருந்து கிளம்பி விக்னேஷ் மூர்த்தி மற்றும் ஜீவஜோதி இருவரும் பெங்களூர் சென்றுள்ளனர். 

அங்கு தனியார் விடுதிக்கு சென்றபோது பெண் வழக்கறிஞரான ஜீவஜோதி என்பவர் அங்கு ஒருவருக்கு போன் செய்துள்ளார். அப்போது அங்கு வந்த ஆப்பிரிக்காவை சேர்ந்தவரிடம் விக்னேஷ் மூர்த்தி கொண்டு சென்று இருந்த 44500 ரூபாயை ஜீவஜோதி வாங்கி அதனை மேற்படி நபரிடம் கொடுத்துள்ளார்.

பணத்தைப் பெற்றுக் கொண்ட ஆப்பிரிக்காவைச் சேர்ந்த நபர் பணத்தை ஒரு பாக்சில் பவுடர்களை போட்டு அதனை பத்து நாட்கள் கழித்து திறந்து பார்த்தால் 10 லட்சம் பணம் இருக்கும் என்று சொல்லி அனுப்பி வைத்துள்ளனர்.

அதனை நம்பி விக்னேஷ் மூர்த்தி நேற்று பாக்ஸை திறந்து பார்த்த போது அதில் 38000 பணம் மட்டும் இருந்துள்ளது .பணம் குறைவாக இருக்கிறது என்று விக்னேஷ் மூர்த்தி பெண் வழக்கறிஞரான ஜீவஜோதியிடம் கேட்டுள்ளார். அதற்கு ஜீவஜோதி எனக்கு ஒன்றும் தெரியாது என்று சொல்லி முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்துள்ளார்.

மறுபடி பணத்தை விக்னேஷ் மூர்த்தி பெரியகுளம் வடகரை மதுரை ரோடு பகுதியில் உள்ள இந்தியன் வங்கி -க்கு சென்று அதன் அருகில் இருந்த ஏடிஎம் மிஷினில் அவரது வங்கி கணக்கில் 38000 பணத்தை டெபாசிட் செய்துள்ளார் . அதில் 18500 பணம் மட்டும் டெபாசிட் ஆனதாகவும் 19500 பணம் டெபாசிட் ஆகாமல் வெளியில் வந்து விட்டுள்ளது .மேலும் டெபாசிட் ஆன பணத்திற்கு ரசீது வராமல் வேறு நான்கு ரசீதுகள் வந்துள்ளது .

டெபாசிட் ஆன பணம் விக்னேஷ் மூர்த்தியின் வங்கி கணக்கிற்கு வராததால் இந்தியன் வங்கி கிளை மேலாளர் கௌதமன் என்பவரிடம் சென்று விக்னேஷ் மூர்த்தி முறையிட்டுள்ளார்.

இதனை சோதனை செய்து பார்த்தபோது விக்னேஷ் மூர்த்தி டெபாசிட் செய்த பணம் மற்றும் கையில் வைத்திருந்த பணம் அனைத்தும் கள்ள நோட்டு என தெரிய வந்ததையடுத்து வங்கி கிளை மேலாளர் கௌதமன் பெரியகுளம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கவே பெரியகுளம் காவல்துறையினர் விக்னேஷ் மூர்த்தி மற்றும் ஜீவஜோதி ஆகிய இருவரையும் கைது செய்து பெரியகுளம் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று இருவர் மீதும் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பெண் வழக்கறிஞர் ஜீவஜோதி ஏற்கனவே வேலை வாங்கி தருவதாக பெரியகுளம் பகுதியைச் சேர்ந்த ஒருவரிடம் ஐந்து லட்சம் வாங்கிக் கொண்டு ஏமாற்றி அவர் மீது பெரியகுளம் போலீசார் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

VIDEOS

Recommended