உத்திரமேரூர் அருகே அரசு கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்த 2 வாலிபர்கள்
லட்சுமி காந்த்
UPDATED: May 6, 2024, 8:28:51 AM
சமீபகாலமாக தமிழகத்தில் போதைப் பொருள்களின் கலாச்சாரம் அதிகரித்து அதன் தொடர்ச்சியாக கல்லூரி மாணவ மாணவிகள் மற்றும் பள்ளி மாணவர்களிடையே கஞ்சா புகைக்கும் பழக்கமும் அதிகரித்து வருகின்றது.
காவல்துறையில் பணி செய்யும் சில காவலர்கள் இதற்கு உடந்தையாக கையூட்டு பெற்றுக் கொண்டு கஞ்சா வியாபாரிகளை ஊக்குவித்து வருகின்றனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் திருப்புலிவனம் பகுதியில் எம்ஜிஆர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ் அரசு கல்லூரி அமைந்துள்ளது. இந்தக் கல்லூரியில் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படிக்கின்றனர்.
சமீபகாலமாக இந்தக் கல்லூரியில் படிக்கின்ற மாணவர்களிடையே கஞ்சா கலாச்சாரம் அதிகரித்து வருவதை கண்டு அப்பகுதி மக்களும் சமூக ஆர்வலர்களும் வேதனை ப்பட்டனர்.
இது தொடர்பாக காவல்துறையினர் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்காததால் கல்லூரி மாணவர்களிடையே கஞ்சா புகைக்கும் பழக்கம் மிகவும் அதிகரித்துவிட்டது. இதனால் அவ்வப்போது சண்டை சச்சரவுகளும் , ஜாதி பிரச்சனைகளும் ஏற்பட்டு வருகின்றது.
இந்நிலையில் அரசு கல்லூரியில் மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்ய முயன்ற இது நபர்களைப் பற்றி போதைப்பொருள் தடுப்பு மற்றும் மதுவிலக்கு அமலாக்க பிரிவு உதவி ஆய்வாளர் சந்திரசேகர் அவர்களுக்கு ரகசிய தகவல் வந்தது.
அந்த தகவலையடுத்து சம்பவ இடத்துக்கு சென்ற மதுவிலக்கு பிரிவு காவல்துறையினர் கல்லூரியின் பின்புறம் பதுங்கி கஞ்சா விற்பனை செய்து வந்த இரு நபர்களை மடக்கிப் பிடித்தனர்.
அவர்களிடம் இருந்து சுமார் மூன்று கிலோ எடையுள்ள கஞ்சா பாக்கெட்டுகள் கைப்பற்றப்பட்டது. மதுவிலக்கு காவல் துறையினர் விசாரணையில் அன்னாத்தூர் பகுதியை சேர்ந்த (கொலை , அடிதடி உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது ) மணிகண்டன் வயது 27 என்பதும், மற்றொருவர் திருப்புலிவனம் பகுதியை சேர்ந்த ருத்ர குமார் வயது 29 என்பதும் தெரிய வந்தது.
இவர்கள் இருவரையும் கைது செய்து உத்திரமேரூர் மாஜிஸ்ட்ரேட் முன்னிலையில் ஆஜர் படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர்.
கல்லூரி மாணவர்கள் இடையே கஞ்சா விற்பனை செய்யும் இதுபோன்ற நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கஞ்சா போதைக்கு அடிமையான கல்லூரி மாணவர்களுக்கு முறையான கவுன்சிலிங் கொடுத்து அவர்கள் திருத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.