• முகப்பு
  • சினிமா
  • ஈழத்தின் முகாரி ராகமாக உலகெங்கும் வெற்றிநடை போடுகின்றது #ஊழி!

ஈழத்தின் முகாரி ராகமாக உலகெங்கும் வெற்றிநடை போடுகின்றது #ஊழி!

இர்ஷாத் ரஹ்மதுல்லா

UPDATED: May 22, 2024, 11:43:19 AM

Sri Lanka News

யாரிந்த #ரஞ்சித் #ஜோசப்?

ஈழத்தில் பிறந்தவன்...கனடாவில் வாழ்பவன்!புலம்பெயர்ந்து வாழ்ந்தாலும் தமிழ் மண்ணின் மீதும் தமிழ்த் தேசியத்தின் மீதும் தீராக் காதல் கொண்டவன்!

தன் மண்ணின் கதைகளைப் படமாக்க வேண்டுமென்பதை இலட்சியப் பணியாக வரித்து, இயக்குநர் அவதாரம் எடுத்துச் “#சினம் #கொள்” என்ற திரைப்படத்தைக் கன்னிப் படைப்பாகப் படைத்துத் திரையுலகைத் திரும்பிப் பார்க்க வைத்தவன்.

பல தென்னிந்திய சினிமாக்களை இயக்க வாய்ப்புக்கள் வந்தபோதும், தன் சொந்த மண்ணின் கதைகளைப் படமாக்க வேண்டுமென்பதற்காக அந்த வாய்ப்புக்களை எல்லாம் உதறித் தள்ளியவன்!

அவனின் இரண்டாவது படைப்பே #ஊழி! ஈழத்தின் முகாரி ராகமாக உலகெங்கும் வெற்றிநடை போடுகின்றது #ஊழி!

ஊழியின் வெற்றி பல ரஞ்சித் ஜோசப்புக்களை உருவாக்கட்டும்! தரமான ஈழ சினிமாக்களைப் பிரசவிக்கட்டும்!

தமிழ்த் தேசியம் திரையினூடாகத் திரைகடல் கடந்து உலகெங்கும் பரவட்டும்! #நீதிக்கான கதவுகளைப் பலமாகத் தட்டட்டும்!

சமரசமற்ற படைப்பைப் படைத்த ரஞ்சித் ஜோசப் அவர்களுக்கு #வாழ்த்துகளும் #நன்றிகளும்

 

VIDEOS

Recommended