• முகப்பு
  • சினிமா
  • நிலைகுலையாமல் மீண்டேன் அமைச்சர் அவதூறுக்கு நடிகை சமந்தா பதில்.

நிலைகுலையாமல் மீண்டேன் அமைச்சர் அவதூறுக்கு நடிகை சமந்தா பதில்.

கார்மேகம்

UPDATED: Oct 19, 2024, 10:09:28 AM

நடிகை சமந்தா

காதலித்து திருமணம் செய்து கொண்ட நடிகை சமந்தா நடிகர் நாக சைதன்யா விவாகரத்துக்கு தெலுங்கானா முன்னால் அமைச்சர் தாரக ராமராவ் காரணம் என்று அம்மாநில பெண் அமைச்சர் சுரேகா சமிபத்தில் பேசியது நாடு முழுவதும் பரபரப்பானது

இதனை சமந்தா உடனடியாக கண்டித்தார் நடிகர்- நடிகைகள் அரசியல் தலைவர்கள் போன்றோரும் எதிர்ப்பு தெரிவித்தனர்

மந்திரி சுரேகா மீது நடிகர் நாகர்ஜுனா கோர்ட்டில் அவதூறு வழக்கும் தொடர்ந்துள்ளார்.

அமைச்சர் சுரேகா

மந்திரியின் அவதூறு பேச்சுக்கு பதில் அளித்து சமந்தா ஐதராபாத்தில் அளித்துள்ள பேட்டியில்

என் மீது அமைச்சர் துவேஷமான கருத்துகள் தெரிவித்தபோது தென்னிந்திய நடிகர் நடிகைகள் அனைவரும் எனக்கு ஆதரவாக நின்றார்கள் ரசிகர்களும் ஆதரவு தெரிவித்தனர் அது எனக்கு தைரியத்தை கொடுத்தது

Latest Cinema News Today In Tamil 

இன்று நான் மீண்டும் ஐதராபாத்துக்கு வந்து உங்கள் முன்னால் நிற்கிறேன் என்றால் அதற்கு காரணம் சினிமா துறையில் இருப்பவர்களும் பொதுமக்களும் என்னை விட்டுக்கொடுக்காமல் இருந்ததுதான் மக்கள் என் மீது காட்டிய அன்பு என்னை இந்த பிரச்சினையில் இருந்து விரைவாக வெளியே வரும்படி செய்தது

சினிமாதுறை எனக்கு உதவாமல் இருந்திருந்தால் நான் நிலைகுலைந்து இருப்பேன் இதில் இருந்து மீள எனக்கு அதிக நாள் பிடித்து இருக்கும் என்றார். 

 

VIDEOS

Recommended