• முகப்பு
  • சினிமா
  • திரைபடத்தின் துண்டு சீட்டை பொதுமக்களுக்கு அளித்து என் படத்தை தியேட்டரில் பாருங்கள் என கூறினார் கார்த்தி

திரைபடத்தின் துண்டு சீட்டை பொதுமக்களுக்கு அளித்து என் படத்தை தியேட்டரில் பாருங்கள் என கூறினார் கார்த்தி

சண்முகம்

UPDATED: Oct 13, 2024, 7:37:06 AM

கடலூர் மாவட்டம்

சிதம்பரத்தில் நடராஜர் ஆலயத்தில் ஆரியமாலா அக்டோபர் 18 ஆம் தேதி அன்று ஒரு திரைப்படம் வெளியிடப்படுகிறது அந்த திரைப்படத்தின் கதாநாயகன் கார்த்திக்  சென்னை பாண்டிச்சேரி வடலூர் சிதம்பரம் ஒவ்வொரு ஊர்களாக சென்று பொது மக்களிடம் வருகின்ற 18ஆம் தேதி அன்று நான் கதாநாயகனாக நடித்த ஆரியமாலா படம் வெளியிடப்படுகிறது

துண்டு நோட்டீசை குடுத்து எனது திரைப்படத்தை திரையரங்கில் பாருங்கள் ஒரு வித்தியாசமான திரைப்படம் இது 80-வது வருடம் வந்த ஒரு நாட்டுப்புற பாடல் படம் இது கண்களாலே ஒரு புதுமையான முறையில் காதல் படம்

மேலும் அவர் கூறுகையில் ஆரியமாலா நான் நடித்த நான்காவது படம் இந்த ஆரியமாலா கதை ஒரு கூத்து கலைஞனின் கதை நான் ஒவ்வொரு ஊராக கூத்துக் கலைஞனாக செல்லும் பொழுது கதாநாயகியை நான் சந்திக்கிறேன் அப்பொழுது கண்ணாலே காதல் செய்கின்றேன் மற்றும் இந்த படத்தில் நான் காத்தவராயனாக நடிக்கின்றேன்

என் படத்தை எல்லோரும் பார்க்க வேண்டும் மற்றும் எல்லாம் வல்ல நடராஜப்பெருமானை வேண்டிக் கொண்டு நான் பைக்லையே சென்னை பாண்டிச்சேரி கடலூர் வடலூர் சிதம்பரம் நாளைய தினம் சேலம் நான் நடித்த படத்தின் துண்டு சீட்டை பொதுமக்களுக்கு அளித்து என் படத்தை தியேட்டரில் பாருங்கள் என்று சொல்வதற்காக நான் சென்று கொண்டிருக்கின்றேன் 

இப்படம் மிகப்பெரிய வெற்றி படமாக அமைய வேண்டும் என்று நடராஜ பெருமானை வேண்டிக் கொண்டு வந்தேன் என்று கூறியுள்ளார் பேட்டி அளிப்பவர் ஆரியமாலா படத்தின் கதாநாயகன் கார்த்திக்

 

VIDEOS

Recommended