தமிழ்நாடு அரசு திட்டத்தில் மானியம் தொகை பெற 2500 லஞ்சம் பெற்ற திருவள்ளுர் மாவட்ட தொழில் மைய உதவியாளர்
ராஜ் குமார்
UPDATED: Jul 5, 2024, 5:20:37 AM
திருவள்ளுர் பகுதியைச் சேர்ந்த குமாரசாமி என்பவர் மாவட்ட தொழில் மையத்தில் கடந்த 2022 ஆம் ஆண்டு தமிழ்நாடு திட்டமான UYEGP திட்டம் மூலமாக புக் ஸ்டோர் வைக்க 2 லட்சம் லோன் பெற்றுள்ளார்.
அதற்கான மானியம் பணம் 50 ஆயிரம் பெற மாவட்ட தொழில் மையத்திற்கு கடந்த சில தினங்கள் முன்பாக சென்றுள்ளார்.
அதற்கான மானியம் பெறுவதற்கான ஆவணங்கள் கொடுத்துள்ளார்.
மானியம் தொகை பெற அலுவலக உதவியாளர் சிவக்குமார் அவரிடம் 2500 ரூபாய் கேட்டுள்ளார்.
லஞ்ச தர மறுத்து குமாரசாமி திருவள்ளுர் லஞ்ச ஒழிப்பு துறை போலீசாருக்கு புகார் செய்துள்ளார் .
அவரின் புகாரின் அடிப்படையில் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அவரை பொறி வைத்து பிடிக்க முடிவு செய்தனர்.
இந்நிலையில் இன்று காலை சிவக்குமாரிடம் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் ரசாயனம் தடவிய ஐந்து 500 பணத்தை அவரிடம் கொடுத்து அனுப்பி காத்திருந்தனர்.
ALSO READ | ஸ்ரீமுஷ்ணம் அருகே மனைவியை வெட்டிய கணவன்
அப்போது அவரிடம் லஞ்சம் பணம் பெற்ற அலுவலக உதவியாளர் சிவக்குமாரை லஞ்ச ஒழிப்பு காவல் துறை துணை கண்காணிப்பாளர் ராமச்சந்திரா மூர்த்தி தலைமையிலான போலீசார் அவரை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.