• முகப்பு
  • லஞ்சம்
  • அரக்கோணம் சார்பதிவாளர் அலுவலகத்தில் ரூ1,19,830 ரூபாயை லஞ்ச ஒழிப்பு போலீசார் பறிமுதல்.

அரக்கோணம் சார்பதிவாளர் அலுவலகத்தில் ரூ1,19,830 ரூபாயை லஞ்ச ஒழிப்பு போலீசார் பறிமுதல்.

பரணி

UPDATED: Jun 12, 2024, 9:40:30 AM

இராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் சார்பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவு செய்ய வருபவர்களிடம் லஞ்சம் கேட்பதாக இராணிப் பேட்டை மாவட்ட டிஎஸ்பி கணேசனுக்கு தொடர்ந்து புகார் சென்றது.

குறிப்பாக சார்பதிவாளர் வின்-சென்ட் அதிக அளவு லஞ்சம் கேட்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

இதைத் தொடர்ந்து ராணிப்பேட்டை மாவட்ட டிஎஸ்பி கணேசன் தலைமையில் அரக்கோணம் விஜயலட்சுமி உட்பட 7 பேர் கொண்ட போலீசார் திடீரென அரக்கோணம் சார்பதிவாளர் அலுவலகத் திற்கு வந்தனர்.

அடுத்த சில நிமிடங்களில் சார்பதிவாளர் அலுவல-கத்தில் மெயின் கேட்டை பூட்டினர். மேலும் சார்பதிவாளர் அலுவலக நுழைவாயில் கதவையும் உள்பக்கமாக தாழிட்டுக் கொண்டனர்.

அந்த நேரத்தில் பத்திரப்பதிவு செய்ய வந்திருந்தவர்கள் மற்றும் பத்திரப்பதிவு எழுத்தர்கள், ஊழியர்கள் என்னவென்று தெரியாமல் அதிர்ச்சியடைந்தனர். அதைத் தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு போலீசார் வந்-திருப்பது தெரிந்து கொண்டனர்.

பின்னர் சார்பதிவாளர் வின்சென்ட் பயன்படுத்தும் காரை லஞ்ச ஒழிப்பு போலீசார் முழுவதுமாக சோதனை நடத்தி அதில் இருந்த ஆவணங்களை பறிமுதல் செய்து உள்ளே எடுத்துச் சென்றனர் .

அதன் பின்னர் பத்திரப்-பதிவுக்கு வந்திருந்தவர்களிடம் எவ்வளவு பணம் உள் ளது , எதற்காக வந்தீர்கள்? யாராவது லஞ்சம் கேட்கிறார்களா என்பது உள் ளிட்ட பல்வேறு கேள்விகளை போலீசார் கேட்டனர். இந்த சோதனை 5 மணி நேரமாக நடந்தது.

பின்னர் பத்திரப்பதிவுக்கு வந்திருந்தவர்களை போலீசார் ஒவ்வொருவராக வெளியே அனுப்பினர். இதை தொடர்ந்து, சார் பதிவாளர் அலுவலகத்தில் ஊழியர்களின் டிபன் பாக்ஸ், ஆவணங்கள் உள் ளிட்ட பல்வேறு இடங்களில் மறைத்து வைக்கப் பட்டிருந்த கணக்கில் வராத ரூ. 1,19,830 ஐ லஞ்ச ஒழிப்பு போலீசார் பறிமுதல் செய்தனர்.

இந்த பணம் யாரிடம் எங்கி ருந்து கைப்பற்றப்பட்டது என்ற விவரங்களை லஞ்ச ஒழிப்பு போலீசார் தகவல் தர மறுத்தனர். 5 மணி நேரமாக பத்திரப் பதிவுக்கு வந்திருந்தவர் கள் மற்றும் அவர்-களுடன் வந்த உறவினர்களையும் உள்ளே வைத்து பூட்டியதால் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் சிலர் வாக் குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அரக்கோணம் சார்பதிவாளர் அலுவலகத் தில் பரபரப்பு ஏற்பட்டது.

 

VIDEOS

Recommended