அகிலமே உற்று நோக்கும் அமெரிக்க தேர்தல்.

கார்மேகம்

UPDATED: Aug 11, 2024, 9:15:38 AM

அமெரிக்கா

உலகின் சக்தி வாய்ந்த நாடு வளரும் நாடுகளுக்கு எல்லாம் பஞ்சாயத்து செய்யும் பெரியண்ணன் இப்படிப்பட்ட சக்தி வாய்ந்த நாட்டின் தலைமைப் பதவி என்பது எந்த அளவிற்கு உச்சபட்ச அதிகாரம் கொண்டுள்ளது என்று எண்ணிப்பாருங்கள்

ஆம் ... அமெரிக்க ஜனாதிபதி என்றால் சும்மாவா நம்ம ஊர் கிராமங்களில் இரண்டு பேருக்கு இடையே நடக்கும் தகராறுகளை தீர்க்க வருபவர்களை நீ  என்ன அமெரிக்க ஜனாதிபதியா எங்களுக்கு அறிவுரை சொல்ல வந்துட்ட என்று கேட்பது உண்டு அந்த அளவிக்கு அமெரிக்க ஜனாதிபதி பதவி பிரசித்தி பெற்றது .

( தேர்தல் ஆண்டு )

2024- ம் ஆண்டை தேர்தல் ஆண்டு என்று  கூறும் அளவுக்கு உலகின் மிகப்பெரிய நாடுகளின் பொதுத் தேர்தல் நடந்து வருகிறது 

இந்தியாவின் 18- வது நாடாளுமன்ற பொதுத் தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கி ஜூன் 1- ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற்றது

இதில் பா.ஜனதா‌ தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்று நரேந்திர மோடி 3- வது முறையாக பிரதமராக பொறுப்பேற்றுள்ளார்.

இங்கிலாந்து

அடுத்து உலகின் மிக தொன்மையான அரசியல் அமைப்பை கொண்ட இங்கிலாந்து நாடாளுமன்ற தேர்தல் கடந்த ஜூலை 4- ம் தேதி நடைபெற்றது

இதில் பிரதமர்‌  ரிஷிசுனக் தலைமையில் இருந்த ஆளும் கட்சி தோல்வியை தழுவியது, தொழிலாளர் கட்சி அமோக வெற்றி பெற்றது இதில் ஸ்டார்மர் புதிய பிரதமர் ஆனார் 

மற்றொரு பெரிய நாடான பிரான்ஸ் நாடாளுமன்ற தேர்தல் ஜுன் 3- ம் தேதி மற்றும் ஜூலை 7- ம் தேதி நடைபெற்றது.

இதில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை மொத்தம் உள்ள 577 இடங்களில் பெரும்பான்மைக்கு தேவையான 289 இடங்களை எந்த கட்சியும் பிடிக்கவில்லை இடது சாரி கூட்டணி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது அதிபர் மெக்ரான் தலைமையிலான மையவாத கூட்டணி 2- ம்- இடத்தையும் வலதுசாரி கூட்டணி 3- வது இடத்தையும் பிடித்ததன் மூலம்  அங்கு தொங்கு நாடாளுமன்றம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

அதிபர் மெக்ரான் தனக்கு நேர்  கொள்கையுடைய பிரதமருடன் பணியாற்ற வேண்டிய நிலையில் உள்ளார் 

இந்த வரிசையில் தான் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலும் இந்த ஆண்டு  நடைபெறுகிறது

( அமெரிக்க ஜனாதிபதி தேர்தல்)

அமெரிக்காவில் தற்போது ஜனநாயக கட்சியை சேர்ந்த ஜோபைடன் ஜனாதிபதியாக உள்ளார் துணை ஜனாதிபதியாக இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிஸ் இருக்கிறார்

அமெரிக்க அரசியல் அமைப்புப்படி 4- ஆண்டுகளுக்கு ஒரு முறை ஜனாதிபதி தேர்தல் நடைபெறும் அந்த வகையில் வருகிற நவம்பர் மாதம் 5- ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது இருப்பினும் தேர்தல்  நடைமுறைகள் இந்த ஆண்டு தொடக்கத்திலேயே தொடங்கி விட்டன 

இந்த முறை ஜனநாயக கட்சி சார்பில் தான் மீண்டும் போட்டியிடுவேன் என்று  ஜனாதிபதி ஜோபைடன் அறிவித்தார் அவரை எதிர்த்து குடியரசு கட்சி சார்பில் முன்னால் ஜனாதிபதி டிரம்ப் களம்  இறங்கினார்

இதில் வயது முதிர்வு ஜோபைடனுக்கு பெரும் சவாலாக இருந்தது அதேபோல் வழக்குகள் தண்டனைகள் ஆகியவை டிரம்புக்கு நெருக்கடியாக இருந்தது

இருப்பினும் போட்டியிடுவதில் உறுதியாக இருந்த அவர்கள் இருவரும் முதல் சுற்று நேரடி விவாதத்தில் கலந்து கொண்டனர்

அதில் ஜோபைடன் மாறி மாறி பேசியது விமர்சனத்துக்கு உள்ளானது நிலமையை உணர்ந்த அவர் ஜனாதிபதி தேர்தல் போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்ததுடன் அந்த பதவிக்கு துணை ஜனாதிபதியான கமலா ஹாரிசை முன்மொழிந்தார்.

கமலா ஹாரிஸ் )

ஆரம்பத்தில் டிரம்பின் கை ஓங்கி இருந்த நிலையில் கமலா ஹாரிசின் வரவு தேர்தல் களத்தை மாற்றியுள்ளது நாடு முழுவதும் அவருக்கு ஆதரவு பெருகி வருகிறது 

முன்னால் ஜனாதிபதி ஒபாமாவும் ஆதரவு தெரிவித்துள்ளதால் கமலா ஹாரிஸ் சற்று முன்னிலையில் உள்ளார் 

அவருக்கான பிரசார நிதியும் குவிந்து வருகிறது ஒரு இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் அமெரிக் ஜனாதிபதியாவது சாதனை தானே‌. 

 

VIDEOS

Recommended