மெக்சிகோவின் தேர்தல் வன்முறைகள் பிரச்சாரங்கள் முடிவடைவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பே அதிகரிப்பு
Irshad Rahumathulla
UPDATED: May 30, 2024, 2:47:07 AM
நேற்று புதன்கிழமை தேர்தல் பிரச்சாரங்கள் அதிகாரப்பூர்வமாக முடிவடைவதற்கு சில மணிநேரங்களுக்கு முன்பு, மேற்கில் ஜலிஸ்கோ முதல் தெற்கில் சியாபாஸ் வரை வேட்பாளர்கள் மற்றும் அவர்களது ஆதரவாளர்களுக்கு எதிரான வன்முறைச் செயல்கள் நாடு முழுவதும் பதிவாகியுள்ளன.
தென்-மத்திய மெக்சிகோவில் உள்ள மோரேலோஸ் மாநிலத்தில், குவாட்லா நகரின் நகராட்சித் தலைவர் பதவிக்கு மாற்று எதிர்க்கட்சி வேட்பாளரான Ricardo Arizmendi Reynoso செவ்வாயன்று துப்பாக்கிச் சூட்டில் படுகொலை செய்யப்பட்ட்டார்.
அதே நாளில் ஜலிஸ்கோ மாநிலத்தில், என்கார்னாசியோ டி டயஸ் நகரத்தின் மேயர் பதவிக்கான ஆளும் மொரீனா கட்சியின் வேட்பாளரான கில்பர்டோ பலோமர், கட்சியின் உள்ளூர் அலுவலகங்கள் மீது ஆயுதம் ஏந்திய நபர்களால் தாக்கப்பட்டதை அடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
மத்திய மாநிலமான மெக்சிகோவில், சால்கோவின் மேயர் வேட்பாளர் எடுவார்டோ டியாஸின் டிரக் சுடப்பட்டதாக சர்வதேச செய்தி நிறுவனம் தெரிவித்தது.
இதற்கிடையில், மத்திய மெக்சிகோவின் பியூப்லாவில், தெஹுகான் நகராட்சியில் குடிமக்கள் இயக்க வேட்பாளரான ஜுவான் சாண்டோவல், அவரது பிரச்சார அலுவலகத்திற்கு வெளியே தாக்கப்பட்டார், ஆனால் அவர் காயமடையவில்லை என்று அவரது குழு தெரிவித்துள்ளது.