தமிழகத்தில் வெஸ்ட் நைல் வைரஸ் பாதிப்பா ?

Bala

UPDATED: May 12, 2024, 9:28:09 AM

தமிழகத்தில் வெஸ்ட் நைல் வைரஸ் பாதிப்பு கண்டறியப்படவில்லை - இருப்பினும் கொசு பரவலை பொதுமக்கள் கட்டுப்படுத்த வேண்டும்.

பறவைகளிடமிருந்து கொசுக்களுக்கும், கொசுக்கள் கடிப்பதன் மூலம் மனிதர்களுக்கும் பரவுகிறது வெஸ்ட் நைல் வைரஸ்.

'க்யூலெக்ஸ்' வகை கொசுக்களால் மனிதர்களுக்கு வெஸ்ட் நைல் வைரஸ் பரவும் வாய்ப்பு உள்ளது.

மனிதர்களுக்கிடையே பரவும் தன்மை இல்லை என்றாலும், கொசு பரவலை கட்டுப்படுத்த சுற்றுப்புறத்தை தூய்மையாக பராமரிக்க வேண்டும்.

வைரஸ் தொற்றுக்கு ஆளாபவர்களில் 80% பேருக்கு அறிகுறிகள் தென்படுவதில்லை.

ஆப்ரிக்கா, ஐரோப்பா, மத்திய ஆசிய பகுதிகளில் வெஸ்ட் நைல் வைரஸ் பரவி வருகிறது. 

எலைசா, பி.சி.ஆர் பரிசோதனை மூலமாக கண்டறியலாம்- தமிழக சுகாதாரத் துறை.

 

VIDEOS

Recommended