இந்த ஆண்டு ஆவின் பால் தட்டுபாடு எந்த சூழ்நிலையிலும் ஏற்படாது - அமைச்சர் மனோ தங்கராஜ்
ஆனந்த்
UPDATED: Aug 23, 2024, 7:28:00 AM
சென்னை
ராமாபுரத்தில் தனியார் நிறுவனத்தின் எலக்ட்ரிக் இருசக்கர வாகன ஷோரூம் திறக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் சிறு குறு தொழில் துறை அமைச்சர் தாமோ அன்பரசன், மற்றும் பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.
அத்துடன் புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட இரண்டு எலக்ட்ரிக் இரு சக்கர வாகனங்களையும் அவர்கள் திறந்து வைத்தனர்.
பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ்
நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மனோ தங்கராஜ், ". தமிழக அரசின் பணி நியமனங்களில் இட ஒதுக்கீடு பின்பற்றப்படவில்லை என பாமக தலைவர் ராமதாஸ் கூறியிருப்பது ஒரு புள்ளி விவரம் இல்லாத குற்றச்சாட்டு.
தமிழகத்தில் தற்போது இந்த அளவிற்கு இட ஒதுக்கீடு இருக்கிறது என்றால் அதற்கு காரணம் திமுக தான். நாட்டில் ஆயிரக்கணக்கான கட்சிகள் இருக்கின்றன, அதுபோலதான் நடிகர் விஜயும் கட்சி தொடங்கி இருக்கிறார்.
திமுக
திமுக வளர்ந்த கட்டமைப்புகளை கொண்ட ஒரு மிகப்பெரும் கட்சி. எனவே விஜய் போன்ற நடிகர்கள் கட்சி ஆரம்பிப்பதால் திமுகவுக்கு எந்த கவலையும் இல்லை. எங்களது வெற்றி நடை தொடரும்.
கடந்த ஆண்டு விட தமிழகத்திற்கு கூடுதலாக 10 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்து கொண்டிருக்கிறோம். எனவே இந்த ஆண்டு கண்டிப்பாக பால் தட்டுப்பாடு வராது" என்று தெரிவித்தார்.