• முகப்பு
  • தமிழ்நாடு
  • செம்பேடு சிவன் கோவிலில் கண்டெடுக்கப்பட்ட செப்புத் திருமேனி நடராஜர் உள்ளிட்ட மூன்று திருமேனிகள் 50 கோடி மதிப்பு மிக்கவை

செம்பேடு சிவன் கோவிலில் கண்டெடுக்கப்பட்ட செப்புத் திருமேனி நடராஜர் உள்ளிட்ட மூன்று திருமேனிகள் 50 கோடி மதிப்பு மிக்கவை

சுரேஷ் பாபு

UPDATED: Jun 7, 2024, 7:51:20 PM

திருவள்ளூர் மாவட்டம் செம்பேடு கிராமத்தில் அமைந்துள்ள பழமை வாய்ந்த அகத்தீஸ்வரர் கோவிலில் கண்டெடுக்கப்பட்ட நடராஜர் மற்றும் சிவன் பார்வதி உள்ளிட்ட மூன்று செப்பு உலோக சாமி திருமேனிகள் சுமார் 1000 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த சிலைகள் எனவும் 

இந்த சிலைகளை கிராம மக்கள் பாதுகாப்பாக வைக்க வேண்டும் எனவும் சுமார் 50 கோடி மதிப்பு சிலையை கோவில் கட்டி வழிபாடு நடத்த வேண்டும் எனவும் நடராஜர் திருமேனி யை பார்வையிட்டு சாமி தரிசனம் செய்த முன்னாள் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜி பொன் மாணிக்கவேல் தெரிவித்தார்.

மேலும் அதே பகுதியில் மேலும் பல சிலைகள் இருக்கும் எனவும் கண்டெடுக்கப்பட்ட சிலைகள் அனைத்தையும் வைத்து கோவில் கட்டி வழிபாடு நடத்துங்கள் வருவாய்த் துறையிடம் ஒப்படைக்காதீர்கள் என்றும் பொதுமக்களிடம் விளக்கமாக தெரிவித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் தமிழக அரசு கோவில்களுக்கு 427 கோடியே 80 லட்சம் வரி விதிப்பதாகவும் கோவில்களை கட்டுவதற்கு திமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் அவர்களின் கட்சி பணத்தை வழங்க வேண்டாம் கோவில் வருமானத்தை கோவிலுக்கு வழங்கினால் போதும் பழமையான செம்பு திருமேனி சிலைகள் கண்டெடுக்கப்பட்ட இப்பகுதியில் தொல்லியல் துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு மேலும் சிலைகள் உள்ளனவா என்பதை கண்டறிய வேண்டும் எனவும் அவர் கோரிக்கை வைத்தார்.

 

VIDEOS

Recommended