காங்கிரசுடன் நெருங்கிய உறவை வைத்திருக்கும் முதலமைச்சர் கர்நாடக அரசிடம் பேசி தேவையான பெற வேண்டும் - ஓபிஎஸ்.
கார்மேகம்
UPDATED: Jun 18, 2024, 8:40:58 AM
முன்னாள் முதல் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது
காவிரி நீரில் தமிழ்நாட்டின் பங்கான 177.25 டி.எம்.சி. நீரை ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாட்டுக்கு கர்நாடக அரசு திறந்துவிட வேண்டும் இந்த நீர் மாதாந்திர அடிப்படையில் திறக்கப்பட வேண்டும் இதன் அடிப்படையில் ஜுன் மாதத்தில் 9. 19 டி.எம்.சி. நீர் அளிக்கப்பட வேண்டும் இது சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவு
ஆனால் இதனை அளிக்க மறுத்து வரும் கர்நாடக அரசு உபரி நீரை மட்டுமே அளிப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளது
இந்த ஆண்டு மேட்டூர் அணையில் போதிய அளவு நீர் இருப்பு இல்லாததன் காரணமாக டெல்டா மாவட்டங்களின் குறுவை சாகுபடிக்காக ஜுன் 12- ந்தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்க முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது
இதன் விளைவாக குறுவை சாகுபடி பாதிக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது தமிழ்நாடு அரசு சார்பில் காவிரி ஒழுங்காற்று கூட்டத்தில் இது தொடர்பான கோரிக்கை வைக்கப்பட்டிருந்தாலும்
முதல் அமைச்சர் காங்கிரஸ் தலைமையிடத்திலும் கர்நாடக காங்கிரஸ் கட்சி தலைவர்களிடத்திலும் தனக்குள்ள செல்வாக்கை பயன்படுத்தி தமிழ்நாட்டுக்கு உரிய நீரினை பெற்று தர வேண்டும் என்ற எதிர்பார்ப்பு விவசாயிகளிடையே ஏற்பட்டுள்ளது
காங்கிரஸ் கட்சியுடன் நெருங்கிய உறவை வைத்திருக்கும் முதலமைச்சர் கர்நாடக முதல் மந்திரியுடன் பேசி தேவையான அழுத்தத்தை கொடுத்து சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புப்படி மாதாந்திர அடிப்படையில் தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும் இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.