• முகப்பு
  • தமிழ்நாடு
  • வெளி மாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகள் இன்று முதல் தமிழகத்தில் இயங்ககூடாது

வெளி மாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகள் இன்று முதல் தமிழகத்தில் இயங்ககூடாது

நெல்சன் கென்னடி

UPDATED: Jun 13, 2024, 6:50:46 PM

தமிழகத்தில் 20 ஆயிரம் டீசல் பேருந்துகள் இயக்கப்படுகின்றன , இதில் 1.76 கோடி பேர் பயணம் செய்கின்றனர் , போக்குவரத்து துறை செலவினங்களில் 27 சதவீதம் எரிபொருளுக்காக செலவிடப்படுகிறது , 

இந்நிலையில் செலவினங்களை குறைக்கும் வகையிலும் , காற்று மாசு ஏற்படுவதை தவிர்க்கும் வகையில் 16 CNG மற்றப் 4 LNG பேருந்துகள் சோதனை முறையில் இயக்கம் .

வரும் நாட்களில் அனைத்து பேருந்துகளிலும் படிப்படியாக டீசலுக்கு மாற்றாக இயற்கை எரிவாயு பயன்படுத்த போக்குவரத்து துறை நடவடிக்கை.

கடந்தாண்டு 2000 பேருந்துகள் வாங்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு தற்போது 1000 பேருந்துகள் மஞ்சள் நிறத்தில் புதிய பேருந்துகள் இயக்கப்படுகின்றன , கிராம பகுதிகளில் புதிதாக இள நீல நிறப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன

நடப்பாண்டு கூடுதலாக 3000 பேருந்துகளும் , ஜெர்மன் நிதி உதவியுடன் கூடுதல் பேருந்துகள் என 7500 புதிய பேருந்துகளை மக்கள் பயன்பாட்டில் கொண்டு வர போக்குவரத்து துறை முழு வீச்சில் ஈடுபட்டு வருகிறது .

பண்டிகை மற்றும் வார விடுமுறை நாட்களில் பொதுமக்களின் வருகைக்கேற்ப கூடுதல் பேருந்துகள் போக்குவரத்து துறை சார்பில் இயக்கப்பட்டு வருகின்றன .

சில நேரங்களில் கூடுதல் பயணிகள் வருகை எதிரொலியின் காரணமாக பேருந்து நிலையங்களில் பொதுமக்கள் காத்திருப்பதை பட்டியலிடுபவர்கள் , எத்தனை பேர் அன்றைய தினம் வழக்கத்தை காட்டிலும் கூடுதலாக பயணித்தார்கள் என்பதை கருத்தில் கொள்வதில்லை ...

அதிமுக ஆட்சிக்காலத்தில் புதிய பேருந்துகள் வாங்கபடாத நிலையில் சில பணிமனைகளில் பேருந்துகள் காலாவதியான நிலையில் இயக்கப்பட்டு வருகிறது , அந்தப் பேருந்துகளை மாற்றம் செய்வதற்கு தான் தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது ..

சில இடங்களில் பேருந்துகளில் ஏற்படும் பழுதுகளை வீடியோவாக சமூக வலைதளங்களில் வெளியிடும் நபர்கள் அந்த பேருந்துகள் பழுது நீக்கத்திற்கு பிறகு சீராக இயங்குவது ஏன் பதிவு செய்ய மறுக்கின்றனர் ...

இரவு நேரங்களில் பேருந்துக்காக காத்திருக்கும் பயணிகள் ஒருவர் கூட மீதமின்றி பயணிகளை அவரவர் ஊருக்கு வழியனுப்பு பணிகளில் போக்குவரத்துடைய ஓட்டுனர்களும் நடத்துனர்களும் இரவு பகல் பாராமல் பணியாற்றி வருகின்றனர் .... அதனை அனைவரும் மனதில் கொள்ள வேண்டும்.

பள்ளியில் மாணவர் சேர்க்கை முடிந்த பிறகு மாணவர்களுக்கு இலவச பயண சீட்டு கொடுக்கும் பணிகள் நடைபெறும் எனக்கு குறிப்பிட்டார்.

வெளிமாநில பதவிகள் கொண்ட ஆமினி பேருந்துகள் நாளை முதல் இயங்கக்கூடாது ஏற்கனவே கால அவகாசம் அறிவுறுத்தல் வழங்கப்பட்டது கால அவகாசம் நீட்டிப்பது குறித்து போக்குவரத்து ஆணையரிடம் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் முறையீடு செய்தால் அவர் அது குறித்து முடிவு எடுப்பார் என தெரிவித்தார்.

சட்டமன்ற கூட்டத்தொடர் முடிந்த பிறகு போக்குவரத்து துறையில் உள்ள காலி பணியிடங்கள் நிரப்பப்படும் எனவும் வருகின்ற கூட்டத்தொடரில் போக்குவரத்து துறையில் பல முக்கிய அறிவிப்புகள் வெளியாக உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

தற்பொழுது தற்காலிக பணியாளர்களை பணிக்கு எடுத்து இருக்கிறோம் நிரந்தர பணியாளர்களை நியமிக்கப்பட்ட உடன் அவர்கள் பணியில் இருந்து நீக்கப்படுவார்கள்

அதே போல இந்த ஆண்டு இறுதிக்குள் 500 எலக்ட்ரிக் வாகனங்கள் கொள்முதல் செய்யப்படும் அதற்கான டெண்டரும் விடப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

நிரந்தர பணியாளர்கள் எடுக்கும் பணிகள் சட்டமன்ற கூட்டத்தொடர் முடிந்த பிறகு மூன்று மாதங்கள் கழித்து அதற்கான பணிகள் தொடங்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

 

VIDEOS

Recommended