• முகப்பு
  • தமிழ்நாடு
  • தமிழக மீனவர்களை பாதுகாக்க தவறிவரும் மோடி அரசின் உரிய நடவடிக்கையின்மையால் தொடர் பாதிப்புக்குள்ளாகும் மீனவர்கள்.

தமிழக மீனவர்களை பாதுகாக்க தவறிவரும் மோடி அரசின் உரிய நடவடிக்கையின்மையால் தொடர் பாதிப்புக்குள்ளாகும் மீனவர்கள்.

கார்மேகம்

UPDATED: Jul 2, 2024, 2:40:42 PM

சென்ற வாரம் பாம்பனில் இருந்து மீன்  பிடிக்க சென்ற நான்கு நாட்டுப்படகுகள் 25 மீனவர்களையும் இலங்கை கடற்படை சிறைப்பிடித்து‌ சென்றுள்ளது

பொதுவாக ஒவ்வொரு முறையும் இலங்கை கடற்படை நமது மீனவர்கள் மற்றும் விசைப்படகுகளை பிடித்து கைது செய்யும் போதெல்லாம் சொல்லும் ஒரே பதில் இலங்கையில் இழுவலை மீன் பிடிப்புக்கு தடை உள்ளது ஆனால் தமிழக விசைப் படகுகள் இழு வலையை பயன்படுத்தி மீன்பிடிப் பில் ஈடுபடுவதால் தான் கைது செய்கிறோம் என்று சொல்லுவார்கள்.

அதே நேரத்தில் தங்களை போன்று வழி வலை பயன்படுத்தி மீன் பிடிப்பில் ஈடுபட்டு வரும் தமிழக நாட்டுப் படகு மீனவர்களுக்கு நாங்கள் எந்தவித இடையூறும் செய்ய மாட்டோம் என்றனர் இதனையே இலங்கை இந்திய மீனவர்களுக்கிடையேயான பல‌ கட்ட பேச்சுவாத்தைகளிலும் இலங்கை மீனவர் பிரதிநிதிகளும் இலங்கை அரசும் தொடர்ந்து கூறி வந்துள்ளனர்

அதே நேரத்தில் இதற்கு நேர் மாறாகவும் நடந்து கொள்வதையும் வாடிக்கையாக வைத்துள்ளனர் 

கடந்த 2017- ம் ஆண்டு பாம்பன் தங்கச்சி மடம் நம்புதாளை பகுதியை சேர்ந்த 19 நாட்டுப் படகு வல்லங்களையும் அதில்  சென்ற மீனவர்களையும் இலங்கை அரசு கூறியதற்கு நேர்மாறாக பிடித்து சென்ற இலங்கை கடற்படை வழக்கம் போல் மீனவர்களை மட்டும் விடுவித்தது

இதனை தொடர்ந்து நமது நாட்டுப் படகு மீனவர்கள் தரப்பில் இலங்கை நீதி மன்றங்களில் நடைபெற்ற வழக்குகளில் ஆஜரான வழக்கறிஞர்கள் மூலம் நமது மீனவர்களின் படகுகள் இலங்கை நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட பிறகும் கூட ஒன்றிய மோடி அரசு நமது மீனவர்களின் படகுகளை இலங்கையில் இருந்து எடுத்து வர அனுமதி மறுத்து இலங்கை அரசை விட மிக மோசமாக நடந்து கொண்ட தாலும் அதே போல் இது விசயத்தில் தமிழக மீன்வளத்துறையுமே உரிய முன் முயற்ச்சிகள் எடுக்காத தாலும் மேற்படி படகுகள் இன்று வரை இந்தியாவிற்கு கொண்டு வரப்படவில்லை

இச்சூழலில் இலங்கை கடற்படையின் தற்போதைய கைது நடவடிக்கை என்பது முந்தைய‌ நடவடிக்கைகளின் தொடர்ச்சியாக அமைந்து விடக் கூடாது  என்று மத்திய மாநில அரசுகளை வலியுறுத்தி பாம்பனில் கடல் தொழிலாளர் சங்கம் மீனவர் அமைப்பு மீனவர்கள் மற்றும் மகளிர் மீனவர்கள் அமைப்பு உள்ளிட்ட 200 க்கும் மேற்பட்டோர் தங்களின் நான்கு நாட்டுப் படகுகளையும் அதில் சென்ற 25 மீனவர்களையும் உடன் மீட்டுத் தர வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து

முதல் கட்டமாக பாம்பனில் கடலில் இறங்கி கண்டண ஆர்ப்பாட்டம் மற்றும் தேசிய நேடுஞ்சாலை மறியல்‌ என போராட்டம் நடைபெற்றது

மேலும்‌ இது குறித்து மீனவர்கள் தெரிவிக்கையில் இப்போது நடந்த போராட்டத்தில் அதிகாரிகள் மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளனர் என்றனர்.

 

VIDEOS

Recommended