தமிழக அரசின் திட்டங்களை அறிய 'வாட்ஸ்ஆப்' சேனல் அறிமுகம்

Bala

UPDATED: Jun 10, 2024, 3:06:53 PM

தமிழக அரசின் திட்டங்களை பொதுமக்களுக்கு விரைவாகவும் எளிதாகவும் தெரிவிக்க 'வாட்ஸ்ஆப்' சேனலை தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.

இப்போது வரை, ஒவ்வொரு துறையும் சமூக வலைதளங்களில் தனித்தனியாக கணக்குகளை வைத்திருந்தாலும், மக்கள் அவற்றைப் பாலோ செய்வதன் மூலம் மட்டுமே துறை சார்ந்த அறிவிப்புகள் மற்றும் திட்டங்களை அறிய முடிந்தது.

இதனை மேம்படுத்தும் வகையில், அதிக பயனர்கள் கொண்ட 'வாட்ஸ்ஆப்' வழியாக அரசின் திட்டங்களை பொதுமக்களுக்கு கொண்டு செல்ல தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

'TNDIPR, Govt. of Tamilnadu' என்ற பெயரில் புதிய வாட்ஸ்ஆப் சேனலை அறிமுகப்படுத்தியுள்ள அரசு, பொதுமக்கள் தங்களின் வாட்ஸ்ஆப் கணக்கின் சேனல் பகுதியில் இதனை பாலோ செய்துகொள்ளலாம் என அறிவித்துள்ளது.

 

VIDEOS

Recommended