• முகப்பு
  • தமிழ்நாடு
  • குவைத் சிறையில் வாடும் அப்பாவி‌ மீனவர்களை மீட்க மத்திய மாநில அரசுகள்  நடவடிக்கை எடுக்க மீனவர்கள் கோரிக்கை.

குவைத் சிறையில் வாடும் அப்பாவி‌ மீனவர்களை மீட்க மத்திய மாநில அரசுகள்  நடவடிக்கை எடுக்க மீனவர்கள் கோரிக்கை.

கார்மேகம்

UPDATED: May 19, 2024, 11:22:10 AM

ராமநாதபுரம் மாவட்டம் திருப்பாலைக்குடி‌ மோர்ப்பன்ணை ஆகிய கிராமத்தைச் சேர்ந்த நான்கு மீனவர்கள் கடந்த 2023 ம் ஆண்டு மீன்பிடி ஒப்பந்த கூலிகளாக குவைத் நாட்டுக்குச் சென்றுள்ளனர்

இவர்கள் குவைத் நாட்டிற்கு சென்று மூன்று மாதங்களே ஆண நிலையில் 05/12/2023 அன்று வழக்கம் போல கடலுக்கு மீன்பிடிக்க சென்றுள்ளனர்

இவர்கள் மீன்பிடிக்க சென்ற இடத்தில்‌ இவர்களுடன் இவர்கள் படகில் பல வருடங்கள் பணிபுரியும் மசிறி‌ நாட்டை சேர்ந்த அரபியின் சதிச் செயலால் தவறு ஏதும்‌ செய்யாமலே பொய்யான போதைப் பொருள் வழக்கில் சிக்க வைக்கப்பட்டு 5 மாத காலமாக‌ விசாரணையில் இருந்தவர்களை மீட்டு தர கோரி

அவர்களின் குடும்பத்தினர் மாவட்ட ஆட்சியர் முதல் மத்திய வெளியுறவு துறை இணை அமைச்சர் வரை சம்பந்தப்பட்ட ஒன்றிய‌ அரசிடமும் தமிழக அரசிடமும் அனைத்து மட்டத்திலும் நேரிலும் தபால் மனுவாகவும்‌ மனு கொடுத்தும் இதுவரைக்கும் உரிய நடவடிக்கை இல்லை

அதனால் குவைத் நீதி மன்றம் கடந்த 13/05/2023 ல்‌ நிராபரதியான நம்‌ நான்கு மீனவர்களில் இருவருக்கு 15 வருடம் சிறை தன்டணையும் மற்றும் இரு மீனவர்களுக்கு 7 வருடம் சிறை தன்டணையும் விதித்து  குவைத் நீதி மன்றம் சிறையில் அடைத்துள்ளது‌ சிறையில் உள்ள அப்பாவி மீனவர்களை மீட்க மத்திய மாநில அரசுகள் உரிய துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மீனவர் அமைப்புகளும் மீனவர்களும் மத்திய மாநில‌ அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளன.

 

VIDEOS

Recommended