என்கவுன்ட்டர் ஸ்பெஷலிஸ்ட் ஏடிஎஸ்பி வெள்ளத்துரை சஸ்பெண்ட்.

முகேஷ்

UPDATED: May 31, 2024, 6:14:17 AM

2013-ம் ஆண்டு சிவகங்கையில் காவலில் இருந்த ராமு என்ற கைதி மரணத்தில் தொடர்பு என வெள்ளத்துரை மீது குற்றச்சாட்டு

என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட்’ என்ற பெருமையைப் பெற்ற கூடுதல் காவல் கண்காணிப்பாளரும், 

2004-ம் ஆண்டு சந்தன கடத்தல் வீரப்பனை சுட்டுக் கொன்ற காவலருமான வெள்ளத்துரை ஓய்வு பெறுவதற்கு ஒரு நாள் முன்னதாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார் இது காவல்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

உதவி ஆய்வாளராக இருந்த இவர் வீரப்பனை வீழ்த்தியதற்காக டபுள் பிரமோஷனில் டிஎஸ்பியாக பதவி உயர்வு பெற்றார் தமிழ்நாட்டில் உள்ள பெரும்பான்மையான ரவுடிகளை சுட்டு வீழ்த்திய பெருமை இவரே சாரும் இந்த சூழ்நிலையில் இவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளது தமிழகத்தையே திரும்பி பார்க்க வைத்துள்ளது.

 

VIDEOS

Recommended