முந்தலில் மரம் வீழ்ந்ததில் இளம் யுவதி பலி

ரஸீன் ரஸ்மின்

UPDATED: May 23, 2024, 3:59:09 PM

புத்தளம் - கொழும்பு பிரதான வீதியின் முந்தல் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 61 சந்திக்கு அருகில் இன்று (23) காலை மரம் வீழ்ந்ததில் மோட்டார் சைக்கிளில் பயணித்த யுவதியொருவர் உயிரிழந்துள்ளார்.

மேலும், அந்த மோட்டார் சைக்கிளில் பயணித்த மற்றுமொரு யவதி படுகாயமடைந்த நிலையில் சிலாபம் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.

சிலாபம் - விஜயகடுபொத பகுதியைச் சேர்ந்த டபிள்யூ. எம்.ஜி. துலாங்கி (வயது 22) எனும் இளம் யுவதியே உயிரிழந்துள்ளதுடன், தேவாலய சந்தி, வில்பொத்த பகுதியைச் சேர்ந்த ஹன்சனி லக்ஷிகா எனும் யுவதியே படுகாயமடைந்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

உயிரிழந்த யுவதியின் சடலம் ஆனவிலுந்தாவ கிராமிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் முந்தல் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

VIDEOS

RELATED NEWS

Recommended