• முகப்பு
  • இலங்கை
  • தொழிலதிபர் செல்வராசா அண்ணாச்சியை தேடிச்சென்று நன்றி தெரிவித்த பெண் தொழில் முயற்சியாளர்கள்

தொழிலதிபர் செல்வராசா அண்ணாச்சியை தேடிச்சென்று நன்றி தெரிவித்த பெண் தொழில் முயற்சியாளர்கள்

உமர் அறபாத் - ஏறாவூர்

UPDATED: Apr 13, 2024, 5:19:07 PM

மட்டக்களப்பு கல்லடி பழைய பாலத்திற்கு அருகாமையில் கடந்த 12 வருடங்களாக இயற்கை விவசாய முறையில் விளைவிக்கப்பட்ட உற்பத்திப் பொருட்களை விற்பனை செய்வதன் ஊடாக 30 இற்கு மேற்பட்ட சுய தொழில் முயற்சியாளர்கள் தமது அன்றாட வாழ்வாதாரத்தினை ஈட்டி வருகின்றனர்.

இதே வேளை அவர்களது தற்காலிக விற்பனை கூடாரங்களின் மேற்கூரை விரிப்புக்கள் கடந்த சில மாதங்களாக சிதைவடைந்து வெயில் மற்றும் மழை காலங்களில் தமது வியாபார நடவடிக்கையினை முன்னெடுக்க முடியாமல் பல்வேறு அசௌகரியங்களுக்கு உள்ளாகிய சுய தொழில் முயற்சியாளர்களின் துன்பியலை சமூக செயற்பாட்டாளரும் ஊடகவியலாளரும் சமாதான நீதவானுமாகிய உ.உதயகாந்த் மட்டக்களப்பின் பிரபல தொழிலதிபரும், மட்டக்களப்பு வர்த்தக சங்க தலைவரும் சமூக ஆர்வலருமான தேசபந்து முத்துக்குமார் செல்வராசா அவர்களிடம் சுட்டிக் காட்டியமையினை தொடர்ந்து

 குறித்த விற்பனை கூடாரங்களுக்கான மேற்கூரை விரிப்புக்களை பல இலட்சம் ரூபாய் செலவில் புதிதாக மாற்றியமைத்து கொடுத்தது மட்டுமல்லாது அவர்களுக்கு மேலும் தேவைப்பாடாகவுள்ள பல விடையங்களை செய்து தருவதாக தெரிவித்துள்ள இவர் குறித்த செயற்பாட்டின் ஊடாக சுய தொழில் முயற்சியாளர்களை ஊக்கப்படுத்தியுள்ளார்.


இவ்வாறாக சுய தொழில் முயற்சியாளர்களை ஊக்கப்படுத்தியுள்ள ஈஸ்ட் லகூன் விடுதியின் உரிமையாளரும் தொழிலதிபருமான தேசபந்து முத்துக்குமார் செல்வராசா அவர்களை சுய தொழில் முயற்சியாளர்கள் நேரில் சென்று நன்றி தெரிவித்து

பொன்னாடை போர்த்தி மாலை அணிவித்து கௌரவித்துள்ளதுடன், செல்வராசா அண்ணாச்சிக்கும் அவரது பாரியாருக்கும் கோடி நன்றிகளையும் தெரிவித்துள்ளனர்.

VIDEOS

Recommended