• முகப்பு
  • இலங்கை
  • இலங்கையர்கள் என்ற நாமத்துடனே நாம் ஒன்றுபட்டு செயற்படுவோம் - அமைச்சர் சரோஜா

இலங்கையர்கள் என்ற நாமத்துடனே நாம் ஒன்றுபட்டு செயற்படுவோம் - அமைச்சர் சரோஜா

இர்ஷாத் றஹ்மத்துல்லா

UPDATED: Dec 15, 2024, 2:02:02 PM

இந்திய வம்சாவழி மக்கள் என்ற பெயர் இருந்தாலும் எங்களது அடையாளம் அங்கே கிடையாது,இது போன்று இலங்கைக்குள் நாங்கள் உழைக்கின்ற போதிலும் இலங்கை இன்னமும் எங்களை உள்வாங்கவில்லை என்ற ஆதங்கம் இருப்பதை மலையக மக்கள் மத்தியில் காணப்படுவதாக தெரிவித்துள்ள மகளிர்,மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல் ராஜ் இனியும் இந்திய வம்சாவழி என்ற முத்திரியினை கலைந்து இலங்கையர்  என்ற அங்கீகாரத்தினை பெறும் வழியில் பயணிப்போம் என்றும் கூறினார்.original/2222222_800_450
இரா.சிவலிங்கம் ஞாபகார்த்த குழுவின் இரு நூல்கள் வெளியீட்டு விழா இன்றைய தினம் கொழும்பு தமிழ் சங்கம் சங்கரபிள்ளை மண்டபத்தில் இடம் பெற்றது.

ஞாபகார்த்த குழுவின் தலைவர் எம்.வாமதேவன் தலைமையில் இடம் பெற்ற இந்த நிகழ்வில் மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றுகையில் மேற்கண்ட அழைப்பினை விடுத்தார்.

இந்த நிகழ்வில் பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் கௌரவ அதிதியாகவும் கலந்து கொண்டார்.வரவேற்புரையினை கலாநிதி எஸ்.கருணாகரன் நிகழ்த்தினார்.

மேலும் அமைச்சர் போல்ராஜ் தமதுரையில் குறிப்பிட்டுள்ளதாவது:-

ஓவ்வொரு சமுதாயத்திற்குமான அடையாளம் இருக்கின்றது.அந்த அடையாளங்களை நாம் ஏற்றுக் கொள்ளும் அதே வேளை பொதுவான இந்த நாட்டு அனைத்து மக்களுக்கிடையிலும் காணப்படும் விசித்திரமான அவர்களது விழுமியங்களையும் சமூக அடையாளங்களையும் பாதுகாக்க வேண்டியது எமது எல்லோரது பொறுப்பாகும்.

நாம் அரசிலுக்குள் வந்தது தனிப்பட்ட சுகபோகங்களை அனுபவிக்க அல்ல.எமது ஜனாதிபதி அவர்களினதும் கொள்கையும் அதுவே என்பதினால் நாம் எமது மக்களின் விடிவுக்கும் அபிவிருத்திகளுக்குமாகவே செயற்படுவோம் என்றும் அவர் இதன் போது கூறினார்.

கட்டுரையாளர்களான பேராதனை பல்கலைக்கழகத்தின் சிரேஸ்ட விரிவுரையாளர் கலாநிதி.எஸ்.கே.நவரட்ண ராஜா- மலையகத்தில் எண்ம கல்வி என்ற தலைப்பிலும் தேசிய கல்வி நிறுவகத்தின் பணிப்பாளர் கலாநிதி எஸ்.கருணகாரன் மலையக பல்கலைக்கழக பட்டதாரி மாணவர்கள் பிரச்சினை தொடர்பிலும்.மலையகப் பாடசாலைகளின் கல்வி என்னும் தலைப்பில் இலங்கை திறந்த பல்கலைக்கழக சிரேஸ்ட விரிவுரையாளர் பொன்.இராமதாஸ்,.ஓய்வு நிலை பேராசிரியர்.எஸ்.சந்திரபோஸ்-தேயிலை பெருந்தோட்ட துறையில் வேலை வய்ப்புகள்-மலையக தமிழ் மக்களின் இன அடையாளம் என்னும் தலைப்பில் சட்டத்தரணி இரா.சடகோபன்-தோட்ட தொழிலாளர்கள் சிற்றுடைமையாளர்களாக என்னும் தலைப்பில் நிதி ஆணைக்குழு உறுப்பினர் எம்.வாமதேவனும்,சமூக ஆய்வளர்-மற்றும் முகாமைத்துவ உதவியாளருமான .சீ.ஆர்.ஜோன்-நவீன அடிமை முறைமை,மலையப் பெண்களின் சமகாலப் பிரச்சினைகள் தொடர்பில் சமூக ஆய்வாளர் லெட்சுமணன் கமலேஸ்வரி-மலையகப் பெண்களும்-மனித உரிமை மீறல்களும் என்னும் தலைப்பில் விரிவுரையாளர் கிழக்கிலங்கை பல்கலைக்கழகம் புளோரிடா சிமியோன் ஆகியோரும் இங்கு தமது கட்டுரைகளின் சுருக்கத்தினை இதன் போது சமர்ப்பித்தனர்.

பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் இதன் போது சிற்பபுரையினை ஆற்றினார்.

நன்றியுரையினை பொன் இராமதாஸ் வழங்கினார்.நிகழ்ச்சிகளை ஜடியா நிகழ்ச்சி திட்டத்தின் பிரதான இயக்குநர் சட்டத்தரணி.பா கௌதமன் தொகுத்து வழங்கியமை குறிப்பிடத்தக்கது.

 

 

VIDEOS

Recommended