பாதையை விட்டு விலகி வாகனம் பள்ளத்தில் வீழ்ந்ததில் ஒருவர்பலி
கண்டி நிருபர் ஜே.எம்.ஹாபீஸ்
UPDATED: Dec 17, 2024, 6:17:04 AM
மாத்தளை ரிவஸ்ட்டன் பிரதேசத்தில் வாகன ஒன்று பாதையை விட்டு விலகி பள்ளத்தில் வீழ்ந்ததில் ஒருவர் மரணமடைந்துள்ளார்.
ரிவஸ்டன் - லக்கல வீதியில் இடம் பெற்ற இவ்விப்த்தில் சம்பந்தப்பட்ட வேனில் 8 பேர் பயணித்ததாகவும் தெரிய வருகிறது.
காயமடைந்த ஏனையவர்கள் லக்கல வைத்திய சாலையில் சிகிட்சை பெற்று வருகின்றனர். வாகனத்தில் பயணித்தவர்கள் காலி பிரதேசத்தில் இருந்து சுற்றுலா வந்தவர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது. மேற்படி வேன் சுமார் 50 அடி பள்ளத்தில் வீழ்துள்ளதாகவும் லக்கல பொலீசார் தெரிவிக்கின்றனர்.