தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேஷன் அவர்களின் பிறந்த தினம் இன்றாகும்
இர்ஷாத் றஹ்மத்துல்லா
UPDATED: Dec 17, 2024, 6:46:01 PM
இலங்கை அரசியலில் தமிழ் பேசும் மக்களின் உரிமைக்காக என்றும் குரல் கொடுக்கும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும்,பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேஷன் அவர்களின் பிறந்த தினம் இன்றாகும்.
இதனையொட்டி தமிழ் முற்போக்கு கூட்டணியின் கொழும்பு மாவட்ட செயற்குழு மட்டக்குளி முகத்துவாரம் ஸ்ரீவெங்கடேஷ்வர மகா விஷ்னு தேவஸ்தானத்தில் விசேட பூஜை வழிபாடுகள் இடம் பெற்றன.
அவரது நீண்ட ஆயுளுக்கும் நல்ல சுகத்திற்கும் தொடர்ந்தும் மக்கள் பணியில் அவர் நிலைத்திருக்கும் வகையில் இந்த நிகழ்வு இடம் பெற்றது.
இதன் கொழும்பு உள்ளிட்ட பல பிரதேசங்களில் இருந்து கட்சியின் முக்கியஸ்தர்கள் பலரும் சமூகமளித்திருந்தனர்.
கொழும்பு மாவட்ட தமிழ் முற்போக்கு கூட்டணியின் அமைப்பாளர் பால சுரேஷ் இந்த பிரார்த்தனை நிகழ்விளை ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.